ஒருநாள் குரு தன் சீடர்களிடம் கேட்டார்: ''இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது பெய்துகொண்டிருந்த மழையில் ஒருவன் நனையவில்லை" என்றார்.
இதைக் கேட்ட சீடர்கள் வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்கள்.
''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.
சீடர்கள் தலை குனிந்தார்கள்.
Showing posts with label புனைவு. Show all posts

Saturday, June 20, 2009
Tuesday, June 9, 2009
ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்மம்மா
"ஹுக்கும், கதையெழுதுறீங்க. கட்டுரை எழுதுறே. பாராட்டி புனைபெயர்ல லெட்டரும் எழுததிக்கிறீங்க, என்ன பிரயோஜனம்... என்னைப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கியாடா, என் வெண்ட்ரூ? "
போத்தலின்,இந்த வரிகளை நான் நாகரிகமாக எழுதியிருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ எஸ் எம் எஸ் படத்தில் சந்தானம் பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. கிளாஸுக்கும் தண்ணீர் பாக்கெட்டுக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. இரண்டே வார்த்தைகளில் சொல்வதென்றால்,‘டவுசர் கிளிந்தது’. அடுத்து தாவு தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட?.உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், டங்கு டரியலாகாமல் இருக்க, இந்த இரவை சரக்குக்கான கடிதமாய்...
******
ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்மம்மா,
பிளஸ் டூ கடைசிப் பரிட்சை முடித்து தலையில் துண்டு போடாத குறையாக ஒளிந்து ஒளிந்து பாருக்குள் வந்து நீ குழந்தை போல நின்றிருந்த இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து எவனாவது பார்த்துத் தொலைக்கிறானா என்று பயந்து பயந்து , ஹும்ம்ம்...
சாக்கணாக் கடையின் ஏதோவொரு 'சரக்கு' மாஸ்டரிடம், “ஒரிஜினல்தானே இது” என்று சந்தில் சிந்து பாடி, “என்னடா கேட்டே... அக் மார்க் பட்டை மாதிரி இருக்கும்டா” என்று அவர்கொஞ்சம் பீர் வார்த்தார்.
அதன் பிறகு உன்னைப் பார்க்க கடைக்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.
சளி பிடித்தது என்று சொன்னதற்கு அர்த்தம், ரம்மில் சுடு தண்ணியும் மிளகுத் தூளும் கலந்து அடி என்கிற மருத்துவ உண்மையை வழக்கமாக்கிக்கொண்டது அன்றிலிருந்துதான்.
45 மில்லிதான் நான் முதலில் போட்டது. அதன்பிறகு கடைசிவரை என்கூட வரப் போகிறாய் என்பதையறியாமல்... உன் மீதான காதல் வாய்த்த தருணம் காந்தி ஜெயந்தியன்று கடையடைத்திருந்த தினம்தான். பிளாக்கில் விற்கிறார்களா என்று தயங்கித் தயங்கி நான் நான் தேடினேன்...‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்று பாடல் எங்கோ ஒலித்தது நினைவில் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது துவர்க்கிறது.
அப்புறம் அன்றிரவு கைகால் நடுங்க, தூக்கத்தை இழந்த அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.
மறுநாள் மாலை வீட்டை விட்டுக் கிளம்பும்போதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. அது கொஞ்சம் கோணலாக இருந்ததையும் உணர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மதுவிலக்கைத் தளர்த்தி எத்தனை தலைமுறைகளைச் சந்தோஷப்படுத்தினார்..!
ஒருவேளை லோடு இறக்கிக்கொண்டு இருந்தார்கள் எனில் , ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் அதைப் பற்றி சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான் அடுத்த கடையைத் தேடி. அங்கே போய்ச் சேர்ந்தவுடன் உனக்காகக் காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். அங்கேயும் லோடு இறக்க வந்துவிடுவார்களோ என்று. எதற்கு வம்பு என இரண்டு கடைகளுக்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை %^$#&*%$# என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி ரம்மம்மா..
அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. நிறமற்ற போத்தலில் நீ செம்பழுப்பாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை ஒரு கட்டிங் கரெக்ட் பண்ணுவதே.ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 16 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்...
ரோட்டோர ஆயாக்கடையைப் பார்த்ததும் ஆம்லேட் சாப்பிடலாமா என்று தோன்றியது. ஆம்லேட் சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்...ஒருவன் ஆம்லேட் தின்றுகொண்டிருந்தானே... அவன் தோற்றம்... அதுவும் அந்த விரல்கள்... அதுவும் ஒரு புண்நாள்.
உன்மீதான என்காதல் எவ்வளவு காட்டமாய்ப் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து எவனையாவது ரத்தம் குடித்துப் பார்க்கச்சொல், இரண்டு குவார்ட்டர் அடித்ததுபோல் இருக்குமென் ரத்தம்.
உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் ஃபுல்லை விட கூடுதலாக அடித்தால் கட்டுப்படியாகாது. மேல்வரும்படி கிடைத்தால் கூட்டியிருப்பேனே...
ஆக..
என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை விடுவிக்கும் இனி.
மொத்தமாய் சித்தம் முழுக்க உன் நினைவுகள்
ரத்தம் முழுக்க உன் மூலக்கூறுகள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்
நான் தானே நீ...
இப்படிக்கு,
போதையாய்,
மப்பில்
'கப்பு'டன்
உளறலுக்கு
குவார்ட்டர் கோயிந்தன்

Friday, December 12, 2008
விழுந்தவன்
இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அந்தப் பாலம்..?
தெறிக்கும் என் இதயத்தின், வெடிக்கும் என் நாடிகளின் கேள்வி.
பாலத்தைக் கடந்துவிட்டால், என்னைத் தேடிக்கொண்டிருக்கும் ராணுவத்தினர் அங்கே முகாமடிக்காமலிருந்தால், துரத்திவரும் தீவிரவாதிகளின் துப்பாக்கி ரேஞ்சைத் தாண்டிவிட்டால்... கடவுளே, எத்தனை 'ஆல்'களைத் தாண்டி என் வாழ்க்கை இருக்கிறது! எப்போது வரும் பாலம்?
ஆபத்துக்கும் பாதுகாப்புக்கும் நடுவே வெறும் நூறு மீட்டர் நீளமுள்ள பாலம்! என் அம்மாவின் பெயரைக் கொண்ட நர்மதா நதியின் ஓர் ஓரமாக இரண்டு கரைகளையும் இணைக்கும் பாலம். ஒருபுறம் சமவெளியும் மறுபுறம் அடர்காடுமாகத் தலைக்கும் வாலுக்கும் பெரும் வித்தியாசம் கொண்ட பாலம். என் தாய், அந்த நாற்பது வயதுப் பெண், அவமானம் தாங்காமல் தன் நிர்வாண உடலை ஜலசமாதியாக்க, நர்மதா நதிக்குள் குதித்டது அந்தப் பாலத்திலிருந்துதான்.
கல்லூரிக்குப் போய்க்கொண்டு, ஓய்ந்த நேரங்களில் 'காந்தியன் தாட்ஸ்' சர்டிபிகெட்டுக்காகப் படித்துக்கொண்டு சாமானியனாக இருந்தவன் பழிதீர்க்கும் துப்பாக்கி வேண்டி தீவிரவாதத்தின் பதுங்குகுழியான புத்தினி காட்டுக்குள் நுழைய ஒத்தாசையாக இருந்த பாலம்தான் அது.
ஐயா, நீங்கள் அகிம்சை பேசுவீர்கள். தீவிரவாதம் தப்பென்பீர்கள். உங்கள் நண்பன் திடீரென்று உங்களுக்குப் புரியாத கொள்கை பேசி துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டான். காணாமல் போவதற்குமுன் "கடைசியாக உங்க கிட்டே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..." என்று உங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்க மாட்டான். ராணுவ அதிகாரி, உங்கள் அம்மாவை சந்தேகப்பட்டு த் துன்புறுத்தி, தேவதையாக வாழ்ந்த ஊரில் ஆடை களைந்து அவமானப்படுத்தி, ஊரெல்லாம் நிர்வாண ஊர்வலமாக அடித்து இழுத்துக்கொண்டு போய், அதை நீங்களே பார்க்க நேர்ந்து...
கடவுளே, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனக்கு வந்தது. அந்தக் கோபத்தில்தான் புத்திக்காட்டுக்குள் தீவிரவாதிகளின் காலில் விழுந்தேன்.

அந்த ராணுவ அதிகாரியை, அவன் என் அம்மாவைச் சித்திரவதை செய்தபோது சும்மா இருந்த ஜவான்களை, அவர்கள் குடும்பத்தினரை... பல் கடித்தேன்.!
புத்தியை கோபம் மறைக்க, பிரிந்து போவதில்லை, காட்டிக் கொடுப்பதில்லை என்று தீயில் உள்ளங்கை பொசுக்கிச் சத்தியம் செய்த கணத்தில் நான் அறியேன். இது வெறும் போக்கிரிக் கூட்டமென்று. பணத்தைப் பார்த்தால் திருடும், பெண்களைப் பார்த்தால் தூக்கிக்கொண்டு வரும் கும்பல் என்று. ஒரு பாட்டில் சாராயத்துக்கு நாட்டை விற்றுவிடும் ஆட்கள் என்று மூன்று மாதம் கழித்துத் தெரிந்தபோது ஒன்றும் செய்ய முடியவில்லை.தேசபக்தர்கள் என்று நினைத்திருந்த திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பி, ஹோஷங்காபாத் போய்விடலாம் என்றால், இந்தக் கால் வருடம் செய்திருந்த குற்றங்களுக்கு உள்ளூர் போலீஸிடம் பதில் சொல்லியாக வேண்டும். "தப்பி வந்தாயா, உளவு பார்க்க வந்தாயா...? என்பார்கள். கூட்டாளிகளைப் பிடித்துத்தரச் சொல்வார்கள். நகக்கண் ஊசி, லாடம், ஐஸ்கட்டிப் படுக்கை... கடவுளே! அதனால் மத்தியப் பிரதேச எல்லையையே கடந்து போனாலாவது உயிர் தப்பலாம் என்று... அதோ தெரிகிறது பாலம் ஆ... பின்னால் என்ன சத்தம்..?
ஐயோ...'அவர்கள்' வந்துவிட்டார்கள். பதுங்கு.. பதுங்கு... உட்கார்ந்தபடியே நகர். வெறும் நூறு அடிதான் பாலம். நாற்பது விநாடிகளில் உருண்டு கடந்துவிடலாம்.
எதிர்முனையில6் என்ன புகை..? ஆஹா.... ராணுவத்தினர் முகாம் அடித்திருக்கிறார்கள். குளிர் காய்கிறார்கள்.
உருண்டு உருண்டு... மரநிழல் கவிந்த பாலத்தின் உள்ளே இருபது அடி தூரம் வந்துவிட்டேன். கீழே நுங்கும் நுரையுமாகப் பிரவகித்து உற்சாகமாக ஓடிக்கொண்டிருக்கிறாள் நர்மதா.இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தம்..? அம்மா எப்போதும் அணிந்திருந்த முத்துமாலை போலவும் அவளுடைய நிரந்தப் புன்னைகயின் பல்வரிசை போலவும் நுரையின் சுழிப்பு தோற்றம் காட்டியது.
ராணுவத்தினர் இருப்பதை மோப்பம் பிடித்துவிட்டு 'அவர்கள்' மரங்களின் பின்னால் பம்மி நிற்கிறார்கள். இங்கே முகாம்காரர்களின் பாட்டுச் சத்தம்! அடடா... அடடா... நான் என் வாழ்நாளில் ஒருபோதும் அறிந்திராத பரவச நிலை!
பின்னால் அவர்கள்... முன்னால் ராணுவம். என்ன செய்வேன்? குப்புறப்படுத்தபடியே பாலத்தின் பலகைகளின் இடைவெளியினூடே பார்க்கிறேன். கீழே ஓடிக்கொண்டிருக்கிறாள் என் அம்மா!

Subscribe to:
Posts (Atom)