Wednesday, October 29, 2008

சினிமா ஸர்வே

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
23‍ம் புலிகேசி.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
டி.‍வியில். மகாநதி. எத்தனையாவது முறை பார்த்தேன் என்று தெரியவில்லை. முதல் முறை பார்த்தபோடு ஏற்பட்ட மன வியாகூலம் அப்போதும் ஏற்பட்டது.
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
உதிரிப்பூக்கள்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
ஏதுமில்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
தசாவதாரம் சுநாமி.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வாசிப்பது உண்டு.
7. தமிழ்ச்சினிமா இசை?
விமர்சனம் எழுதுவதற்காக சிடி வெளியான அன்றே கைக்கு வந்துவிடும். ஃப்ரெஷ்ஷாகக் கேட்டுவிடுவேன். ஏகப்பட்ட பாட்டுக்கள் மனப்பாடம்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
உண்டு. எமரால்ட் ஃபாரஸ்ட், நார்னியா, ஜாஸ், ரெட் பியர்ட், டாக்டர் எம் (இந்தப் படத்தின் கதையை இரண்டு முறை சிறுநாவலாக சுஜாதா எழுதியிருக்கிறார். நில்லுங்கள் ராஜாவே, மூன்று நிமிஷம் கணேஷ்.)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
ஒரு பாட்டு எழுதியிருக்கிறேன். பிடித்திருந்தது. செய்ய இப்போது தயாராக இருக்கிறேன். ஒரு பாட்டினால் தரம் மேம்பட வாய்ப்பில்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இப்போது போல்வேதான் இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
சந்தோஷமாக புத்தகம் படிப்பேன். பிளாகர்கள் சிலர் கலாய்க்கப் படம் கிடைக்காமல் பாயைப் பிறாண்டலாம்.

4 comments:

வால்பையன் said...

நீங்களா இது!
சொல்லவே இல்லை

த.அகிலன் said...

பேனா மினுக்கல் இந்த தலைப்பு ரொம்ப நல்லாஇருக்கு...

ஆனா இன்னும் மினுங்க ஆரம்பிக்கலையா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டாக்டர் எம் .............


பாண்டு கோஷ்டியா

முரளிகண்ணன் said...

nice