Wednesday, December 10, 2008

யப்பா போதுமப்பா..!


பிழிஞ்ச துணிபோல் ஊரே மழையால் ஊறிப்போச்சப்பா
நனைஞ்சு காய்ஞ்சு நனைஞ்சு காய்ஞ்சு நாறிப்போச்சப்பா
கிழிஞ்ச வானம் ஓட்டைவாளியாக் கீறிப்போச்சப்பா
எரிஞ்சு கெடந்த தரையில் வெள்ளம் ஏறிப்போச்சப்பா

காகிதம் மடிச்சுக் கப்பல் செஞ்ச பழக்கம் கெடலாமா
குடிசை பூராம் கப்பல் போல வெள்ளத்தில் விடலாமா
மாமூல் வாழ்க்கை மண்ணாக அடி மடியில தொடலாமா
மனுஷப் பய மேல் இரக்கமில்லாம கோபப்படலாமா

ஊருக முங்க ஊத்துன பெறகும் மேகம் தீரலையா
தாரு ரோடெல்லம் முழுங்கின பெறகும் தாகம் தீரலையா
வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா

11 comments:

Thamiz Priyan said...

சந்தம் நல்லாவே சேர்ந்து இருக்குது..;) வருணரை தேவையான வறண்ட பகுதிக்கு மாத்தி போகச் சொல்லுங்க..:)

rapp said...

:(:(:(

KARTHIK said...

// காகிதம் மடிச்சுக் கப்பல் செஞ்ச பழக்கம் கெடலாமா
குடிசை பூராம் கப்பல் போல வெள்ளத்தில் விடலாமா.//

//வருணரை தேவையான வறண்ட பகுதிக்கு மாத்தி போகச் சொல்லுங்க..:)//

வேர என்னத்த சொல்ல.

பரிசல்காரன் said...

////வருணன், இந்திரன் மழைக்குச் சாமியாம் போதும் போங்கையா
வெயிலுக்குக் கடவுள் யாரோ எவரோ வெளியில வாங்கையா //

கலக்கல்.

தளை தட்டுதா தல?

word verificationஐ எடுத்துடுங்க பாஸ்!

கார்க்கிபவா said...

அட்றா அட்றா நாக்க முக்க நாக்க முக்க...

புதுகை.அப்துல்லா said...

நோகடிச்ச மழையும்ங்கூட மனங் குளிர வைக்குது!
அண்ணன் பாட்ட படிச்சதால மனசு ஆட்டம் போடுது!
தண்ணி பற்றி பாடும் அண்னன் தவிப்பு எனக்குப் புரியுது!
வீட்டைச் சுற்றி தண்ணியால டாஸ்மார்க் கனவு தகருது!
:))

ரமேஷ் வைத்யா said...

தமிழ் பிரியன்

ராப்

கார்த்திக்
வருகைக்கு நன்றி.

ரமேஷ் வைத்யா said...

பரிசல்,
தளை தட்டவில்லையே அண்ணன்

கார்க்கி,
ஒரே டான்ஸ்தானா? ம்...

புதுகை.அபுத்துல்லா அண்ணன்,
கார்க்கியின் கமென்ட்டை அப்படியே உங்களுக்குத் திருப்பிவிடுகிறேன். இன்ஸ்டன்ட் பாட்டு அருமை. (தண்ணின்னாலே பிரச்னைதான் எனக்கு.)

Karthikeyan G said...

ஐயா... சூப்பரு!!!

ரமேஷ் வைத்யா said...

கார்த்திகேயன்,
நலம்தானே

அன்புடன் அருணா said...

:(
aruna