Friday, December 12, 2008

விழுந்தவன்

இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது அந்தப் பாலம்..?

தெறிக்கும் என் இதயத்தின், வெடிக்கும் என் நாடிகளின் கேள்வி.

பாலத்தைக் கடந்துவிட்டால், என்னைத் தேடிக்கொண்டிருக்கும் ராணுவத்தினர் அங்கே முகாமடிக்காமலிருந்தால், துரத்திவரும் தீவிரவாதிகளின் துப்பாக்கி ரேஞ்சைத் தாண்டிவிட்டால்... கடவுளே, எத்தனை 'ஆல்'களைத் தாண்டி என் வாழ்க்கை இருக்கிறது! எப்போது வரும் பாலம்?

ஆபத்துக்கும் பாதுகாப்புக்கும் நடுவே வெறும் நூறு மீட்டர் நீளமுள்ள பாலம்! என் அம்மாவின் பெயரைக் கொண்ட நர்மதா நதியின் ஓர் ஓரமாக இரண்டு கரைகளையும் இணைக்கும் பாலம். ஒருபுறம் சமவெளியும் மறுபுறம் அடர்காடுமாகத் தலைக்கும் வாலுக்கும் பெரும் வித்தியாசம் கொண்ட பாலம். என் தாய், அந்த நாற்பது வயதுப் பெண், அவமானம் தாங்காமல் தன் நிர்வாண உடலை ஜலசமாதியாக்க, நர்மதா நதிக்குள் குதித்டது அந்தப் பாலத்திலிருந்துதான்.
கல்லூரிக்குப் போய்க்கொண்டு, ஓய்ந்த நேரங்களில் 'காந்தியன் தாட்ஸ்' சர்டிபிகெட்டுக்காகப் படித்துக்கொண்டு சாமானியனாக இருந்தவன் பழிதீர்க்கும் துப்பாக்கி வேண்டி தீவிரவாதத்தின் பதுங்குகுழியான புத்தினி காட்டுக்குள் நுழைய ஒத்தாசையாக இருந்த பாலம்தான் அது.

ஐயா, நீங்கள் அகிம்சை பேசுவீர்கள். தீவிரவாதம் தப்பென்பீர்கள். உங்கள் நண்பன் திடீரென்று உங்களுக்குப் புரியாத கொள்கை பேசி துப்பாக்கி தூக்கியிருக்க மாட்டான். காணாமல் போவதற்குமுன் "கடைசியாக உங்க கிட்டே சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..." என்று உங்கள் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருக்க மாட்டான். ராணுவ அதிகாரி, உங்கள் அம்மாவை சந்தேகப்பட்டு த் துன்புறுத்தி, தேவதையாக வாழ்ந்த ஊரில் ஆடை களைந்து அவமானப்படுத்தி, ஊரெல்லாம் நிர்வாண ஊர்வலமாக அடித்து இழுத்துக்கொண்டு போய், அதை நீங்களே பார்க்க நேர்ந்து...

கடவுளே, யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது. எனக்கு வந்தது. அந்தக் கோபத்தில்தான் புத்திக்காட்டுக்குள் தீவிரவாதிகளின் காலில் விழுந்தேன்.


அந்த ராணுவ அதிகாரியை, அவன் என் அம்மாவைச் சித்திரவதை செய்தபோது சும்மா இருந்த ஜவான்களை, அவர்கள் குடும்பத்தினரை... பல் கடித்தேன்.!

புத்தியை கோபம் மறைக்க, பிரிந்து போவதில்லை, காட்டிக் கொடுப்பதில்லை என்று தீயில் உள்ளங்கை பொசுக்கிச் சத்தியம் செய்த கணத்தில் நான் அறியேன். இது வெறும் போக்கிரிக் கூட்டமென்று. பணத்தைப் பார்த்தால் திருடும், பெண்களைப் பார்த்தால் தூக்கிக்கொண்டு வரும் கும்பல் என்று. ஒரு பாட்டில் சாராயத்துக்கு நாட்டை விற்றுவிடும் ஆட்கள் என்று மூன்று மாதம் கழித்துத் தெரிந்தபோது ஒன்றும் செய்ய முடியவில்லை.தேசபக்தர்கள் என்று நினைத்திருந்த திருட்டுக் கும்பலிடமிருந்து தப்பி, ஹோஷங்காபாத் போய்விடலாம் என்றால், இந்தக் கால் வருடம் செய்திருந்த குற்றங்களுக்கு உள்ளூர் போலீஸிடம் பதில் சொல்லியாக வேண்டும். "தப்பி வந்தாயா, உளவு பார்க்க வந்தாயா...? என்பார்கள். கூட்டாளிகளைப் பிடித்துத்தரச் சொல்வார்கள். நகக்கண் ஊசி, லாடம், ஐஸ்கட்டிப் படுக்கை... கடவுளே! அதனால் மத்தியப் பிரதேச எல்லையையே கடந்து போனாலாவது உயிர் தப்பலாம் என்று... அதோ தெரிகிறது பாலம் ஆ... பின்னால் என்ன சத்தம்..?

ஐயோ...'அவ‌ர்க‌ள்' வ‌ந்துவிட்டார்க‌ள். ப‌துங்கு.. ப‌துங்கு... உட்கார்ந்த‌ப‌டியே நக‌ர். வெறும் நூறு அ‌‌டிதான் பால‌ம். நாற்ப‌து விநாடிக‌ளில் உருண்டு க‌ட‌ந்துவிட‌லாம்.

எதிர்முனையில6் என்ன‌ புகை..? ஆஹா.... ராணுவ‌த்தின‌ர் முகாம் அடித்திருக்கிறார்க‌ள். குளிர் காய்கிறார்க‌ள்.

உருண்டு உருண்டு... ம‌ர‌நிழ‌ல் க‌விந்த‌ பாலத்தின் உள்ளே இருப‌து அடி தூர‌ம் வ‌ந்துவிட்டேன். கீழே நுங்கும் நுரையுமாக‌ப் பிர‌வகித்து உற்சாக‌மாக‌ ஓடிக்கொண்டிருக்கிறாள் ந‌ர்ம‌தா.இன்றைக்கு ஏன் இந்த‌ ஆன‌ந்த‌ம்..? அம்மா எப்போதும் அணிந்திருந்த‌ முத்துமாலை போல‌வும் அவ‌ளுடைய‌ நிர‌ந்த‌ப் புன்னைக‌யின் ப‌ல்வ‌ரிசை போல‌வும் நுரையின் சுழிப்பு தோற்ற‌ம் காட்டிய‌து.
ராணுவ‌த்தின‌ர் இருப்ப‌தை மோப்ப‌ம் பிடித்துவிட்டு 'அவ‌ர்க‌ள்' ம‌ர‌ங்க‌ளின் பின்னால் ப‌ம்மி நிற்கிறார்க‌ள். இங்கே முகாம்காரர்களின் பாட்டுச் ச‌த்த‌ம்! அட‌டா... அட‌டா... நான் என் வாழ்நாளில் ஒருபோதும் அறிந்திராத‌ ப‌ர‌வ‌ச‌ நிலை!

பின்னால் அவ‌ர்க‌ள்... முன்னால் ராணுவ‌ம். என்ன‌ செய்வேன்? குப்புற‌ப்ப‌டுத்த‌ப‌டியே பால‌த்தின் ப‌ல‌கைக‌ளின் இடைவெளியினூடே பார்க்கிறேன். கீழே ஓடிக்கொண்டிருக்கிறாள் என் அம்மா!

15 comments:

கார்க்கிபவா said...

அப்படி வாங்க வழிக்கு. இனிமேல் அடிக்கடி எழுதனும் தல. இருங்க படிச்சிட்டு வரேன்

Thamiz Priyan said...

முடிவு தேவையில்லையெனினும் என்ன நடந்தது என்று ஊகிக்க வைக்கின்றது.. :)

வலையப்பன் said...

தமிழ்மணத்துல அடிக்கடி தல தட்டுப்படுது போல... கலக்குங்க

வலையப்பன் said...

கன்னிராசி படத்துல குப்பைத் தொட்டியை எடை மிஷினில் தூக்கி வைப்பது பாண்டியராஜன்தானா? நல்லா படத்தை பாருங்க... படத்தோட இயக்குநர்தான் பாண்டியராஜன்...அப்ப குப்பைத் தொட்டியை தூக்கி வச்சது நடிகர் பிரபு. இது உங்களுக்கு இல்ல தமிழ் பிரியனுக்கு‌

வால்பையன் said...

இருதலை கொள்ளியாக இருக்கும் ஒரு மனிதனின் மனநிலையை அருமையாக விளக்கியிருக்கிரீர்கள்.

உங்களிடம் காசு பணமெல்லாம் கேக்க மாட்டோம். அடிக்கடி எழுதுங்கள்

புதுகை.அப்துல்லா said...

உங்களிடம் காசு பணமெல்லாம் கேக்க மாட்டோம். அடிக்கடி எழுதுங்கள்

//

கட்டிங் கூட கேட்க மாட்டோம்.தைரியமா எழுதுங்க :))))

பரிசல்காரன் said...

பத்தி பிரிங்க அண்ணா. ப..டி..ச்..சு..ட்..டே... இருக்கறமாதிரி இருக்கு.

பல இடங்களில் உங்கடைப் வர்ணனைகள் ரொம்ப ரசிக்கவைச்சது!

ரமேஷ் வைத்யா said...

! கார்க்கி,
நன்றி.

@ தமிழ் பிரியன்,
அவன் செத்ததில் சிரிப்பென்ன?

# பரக்கத்,
ஹலோ

$ வால் பையன்,
காசு கேட்டுத்தான் பாருங்களேன்!

% அப்துல்லா அண்ணன்,
கட்டிங் என்பது போன்ற கெட்ட வார்த்தைகள் இந்த வலைப்பக்கத்தில் மட்டுறுத்தப் படுகின்றன. (ஆஃபில் ஆரம்பிக்கவும்)

^ பரிசல்காரன்,
yjsmld gpt yjr dihhrdyopm.
மாத்தியாச்சு.

ரமேஷ் வைத்யா said...

நண்பர்களே,
வடபழனி விஜயா ஹார்ட் ஃபௌண்டேஷனில் அநுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி ஏ நெகட்டிவ், ஏ1 நெகடிவ், ஏ2 நெகடிவ் ரத்த வகை உடனடியாகத் தேவைப்படுகிறது. உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 98400 28347 மற்றும் 93828 62849.
இந்த வேண்டுகோளைப் பார்க்கும் சக பதிவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரிவிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி.

அன்புடன் அருணா said...

//கீழே ஓடிக்கொண்டிருக்கிறாள் என் அம்மா!//

ம்ம்ம்...நல்லா எழுதுறீங்க!..
அன்புடன் அருணா

Sanjai Gandhi said...

உண்மையை சொல்லிடறேன்.. முடிவு எனக்கு விளங்கவில்லை.. என் இலக்கிய அல்லது கதை படித்து புரியும் அறிவு இவ்வளவுதான்..

பரிசலார் சொன்னாப்ல வர்ணனைகள் ரொம்பவே ரசிக்கிற மாதிரி கீதுங்ணா.. :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லா வந்திருக்குங்க கதை.

ரமேஷ் வைத்யா said...

அன்புடன் அருணா, ஜ்யோவ்ராம் அண்ணா,
வருகைக்கு நன்றி.

ரமேஷ் வைத்யா said...

சஞ்சய்,
உங்களுக்குப் புரிந்த அளவுதான் கதை. அதற்கு மேல் ஏதும் இல்லை.

வெண்பூ said...

இப்போதுதான் படித்தேன் ரமேஷ்.. கலக்கி விட்டீர்கள். அருமையான வேகம், சொல்லாமே புரியும் முடிவு.. பாராட்டுகள்.