Monday, December 22, 2008
தளபதி: சினிமா விமரிசனம்
ஒரு காட்சி:
காதலி சொல்கிறாள் "சூர்யா, எனக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம்." அவன் தலையில் இடி இறங்குகிறது. அவள் மெல்ல விலகுகிறாள்.
இந்தக் காட்சியில் இடம் பெற்றவர்கள் ஷோபனாவும் ரஜினிகாந்தும். அந்த சூர்யா முப்பத்திரெண்டு வருஷங்களாக அசிங்கங்களையே சந்தித்து வளர்ந்தவன். அவனுடைய அகராதியில் வாழ்க்கை என்கிற பதத்துக்கு, ரத்தம், சாவு, கொலை, சைக்கிள் செயின் இவைதான் அர்த்தம். அப்படிப்பட்டவனுக்கு அன்பை அறிமுகப்படுத்தியவள் சொன்ன சேதி இது. இந்த அதிர்ச்சியை நெகிழ்ச்சியை சினிமாவாகச் சொல்ல வேண்டும். காட்சியில் ஒளி மங்குகிறது. பாத்திரங்களின் பாவங்களை வெளிப்படுத்த முடியாத பொம்மை முகங்களின் மீது இருள் கவிகிறது. ஆட்கள் ஸில் அவுட்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள். பின்னால் தூரத்திலிருந்து ஓர் ஒற்றைப் புல்லாங்குழல் புறப்படுகிறது. அதன் ஸ்தாயி உயர உயர அந்தச் சோகம் தெளிவாகப் புலப்பட்டுவிடுகிறது. இங்கே பார்வையாளர் கண்ணைத் துடைத்துக்கொள்கிறார்.
இன்னொரு காட்சி:
பிறந்த அன்றிலிருந்து முப்பத்திரெண்டு வருடங்களாக முகம் பார்த்தறியாத அம்மா, பார்க்க வந்திருக்கிறார். இருவரும் மெல்ல அருகில் வந்து தழுவிக்க்கொள்கிறார்கள். லாங் ஷாட்டில் வெகுதூரம் போகிறார்கள. பின்னால் பத்துப் பதினைந்து வயலின்கள் பீறிடுகின்றன. அவற்றின் உற்சாக நரம்புகளிலிருந்து உல்லாச உல்லாச ராகம். அந்தப் பாத்திரங்களின் சந்தோஷம், அந்த வயலின்களின் மூலமாக நாமறியாமல் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.
'ம்யூஸிக் டைரக்டர்' என்கிற ஆங்கிலப் பதத்தை 'இசையமைப்பாளர்' என்று மொழி பெயர்த்திருக்கிறோம். இந்த மாதிரி, டரக்டர்களின், நடிகர்களின் வேலையைப் பாதி குறைக்கும் இசையமைப்பாளர்களுக்காவது 'இசை இயக்குனர்' என்று போடலாம்.
டைரக்டர் மணிரத்னத்திற்கு இந்தப் படம் ஒரு படி பின்னடைவு. 'பாடல் வரிகளை பிக்சரைஸ் பண்ணுவதில் நிபுணர்' என்று பெயர் வாங்கிய மணிரத்னம், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாட்டு மெட்டில் திணறி, தோற்றுவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. பின்னணியில் வாத்தியங்கள் விழா கொண்டாடிக்கொண்டு இருக்க திரையில் ஷோபனா, காதிலிருக்கும் தாடைக் கழற்றுகிறார். ரஜினி, ஷோபனாவின் நெக்லேசைக் கழற்றுகிறார். (இடையிடையே குதிரைச் சண்டை வேறு, எந்த முகாந்திரமுமின்றி) கற்பனையைக் கழற்றிவைத்துவிட்டார் மணிரத்னம்.
இரண்டு வருடத்துக்கு முந்தைய படமொன்றில் ஒரு சமூக விரோதியை ஒரு குழந்தை கேட்கும்.
''நீ நல்லவனா, கெட்டவனா?"
''தெரியலையே...'' என்பதே மணிரத்னத்தின் பதிலாக இருந்தது. அவரது குழப்பம் இன்னும் தீரவில்லை. தினசரி நாலு பேரையாவது அடித்தே கொன்றால்தான் தூக்கம் வரும் என்று இருக்கிற தேவாவும் சூர்யாவும் நல்லவர்களா, கெட்டவர்களா?
'நல்ல கெட்டவர்கள்' என்று சொல்ல வருகிறார் டைரக்டர்.
இவர்கள் யாரையாவது கொல்ல ஆக்ரோஷமாகக் கிளம்பும்போது படம் பார்ப்பவர் உற்சாகமாய்க் கை தட்டுகிறார்.
ஜனங்களை வியாதியஸ்தர்களாக்குவதற்கா, சினிமா?
வருடத்திற்கு ஒரு படம்தான் இயக்குகிறார் மணிரத்னம். படத்துக்குப் படம் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சிக்கலாம்.
இவரது எல்லாப் படங்களிலும் அடிக்கடி வரும் ஒரு வசனம், 'ய்யேன்?'
'அடடா, இரண்டே எழுத்தில் எத்தனை அர்த்தம் புதைந்துகிடக்கிறது!' என்று நாம் சொல்ல வேண்டுமாம். கேரக்டரைசேஷனில் எந்த வித்தியாசமுமின்றி , எல்லாப் பாத்திரங்களும் ஒர்ரே மாதிரிப் பேசுவது செயற்கையாக இல்லை?
இன்றைய தேதிக்கு இது வெற்றிப் படம். அதில் பாதிப் பங்கு பப்ளிசிடிக்கு இருக்கிறது.
கதையைப் பற்றியோ கலையைப் பற்றியோ கவலைப்படாமல் சகல காம்ப்ரமைஸ்களோடும் எடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதாரணப் படம்.
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
என்னது! காந்திய சுட்டுட்டாங்களா?
:)))))
அனுஜன்யா
அனுஜன்யா,
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது.
//அதில் பாதிப் பங்கு பப்ளிசிடிக்கு இருக்கிறது.//
Are you so sure of what you are saying?
Venkatramanan
நான் ஏதோ எங்கள் தலைவர் ரித்திஷின் வெளிவராத அடுத்த படத்தின் விமர்சனமோ என்று வந்தேன்..
ச்சே ஏமாத்திட்டீங்களே தலைவா..
சமீபத்தில் 1990களில் எழுதின விமர்சனமா?
நல்லாருக்கு.. நச்னு
வெங்கட் ராமன்,
ஏன் அப்படிக் கேட்கிறீர்கள். நான் சொன்னது சரிதான்.
அதீஷா,
வாங்க. அந்த சமீபத்தில் எழுதியதுதான்.
:)
ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் தளபதி வெளிவந்த புதிசில் இருந்த சினிமா, கலை, இலக்கிய அறிவை விட இப்பொழுது நிறைய இருக்கிறது என்பது உண்மைதானே...
yennathu M.G.R america vula irukkaaraa???
தமிழன் கறுப்பி,
வருகைக்கு நன்றி.
இது படம் வெளியானபோது எழுதியது.
புதுகை அண்ணன்
தமிழ்ப்பிரியன்,
வருக வருக!
ஒரு புதிய செய்தி...
காமிரா என்ற கருவியின் மூலம் காட்சிகளை படமாக்க முடியுமாம்.
// முந்தைய படமொன்றில் ஒரு சமூக விரோதியை ஒரு குழந்தை கேட்கும்.
''நீ நல்லவனா, கெட்டவனா?"
''தெரியலையே...'' என்பதே மணிரத்னத்தின் பதிலாக இருந்தது. அவரது குழப்பம் இன்னும் தீரவில்லை. தினசரி நாலு பேரையாவது அடித்தே கொன்றால்தான் தூக்கம் வரும் என்று இருக்கிற தேவாவும் சூர்யாவும் நல்லவர்களா, கெட்டவர்களா?
'நல்ல கெட்டவர்கள்' என்று சொல்ல வருகிறார் டைரக்டர்.
இவர்கள் யாரையாவது கொல்ல ஆக்ரோஷமாகக் கிளம்பும்போது படம் பார்ப்பவர் உற்சாகமாய்க் கை தட்டுகிறார்.
ஜனங்களை வியாதியஸ்தர்களாக்குவதற்கா, சினிமா?
வருடத்திற்கு ஒரு படம்தான் இயக்குகிறார் மணிரத்னம். படத்துக்குப் படம் கொஞ்சம் வித்தியாசம் காட்ட முயற்சிக்கலாம்.
இவரது எல்லாப் படங்களிலும் அடிக்கடி வரும் ஒரு வசனம், 'ய்யேன்?'
'அடடா, இரண்டே எழுத்தில் எத்தனை அர்த்தம் புதைந்துகிடக்கிறது!' என்று நாம் சொல்ல வேண்டுமாம். கேரக்டரைசேஷனில் எந்த வித்தியாசமுமின்றி , எல்லாப் பாத்திரங்களும் ஒர்ரே மாதிரிப் பேசுவது செயற்கையாக இல்லை?
இன்றைய தேதிக்கு இது வெற்றிப் படம். அதில் பாதிப் பங்கு பப்ளிசிடிக்கு இருக்கிறது.
கதையைப் பற்றியோ கலையைப் பற்றியோ கவலைப்படாமல் சகல காம்ப்ரமைஸ்களோடும் எடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதாரணப் படம். //
இதை இன்று வரை எல்லா மணிரத்னம் பட விமர்சனங்களுக்கும் TEMPLATE-ஆக வெச்சுக்கலாம் போல இருக்கே!! :)
welcome Nanjil Pratap.
Hellow Karthikeyan G
//டைரக்டர் மணிரத்னத்திற்கு இந்தப் படம் ஒரு படி பின்னடைவு. 'பாடல் வரிகளை பிக்சரைஸ் பண்ணுவதில் நிபுணர்' என்று பெயர் வாங்கிய மணிரத்னம், 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' பாட்டு மெட்டில் திணறி, தோற்றுவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. பின்னணியில் வாத்தியங்கள் விழா கொண்டாடிக்கொண்டு இருக்க திரையில் ஷோபனா, காதிலிருக்கும் தாடைக் கழற்றுகிறார். ரஜினி, ஷோபனாவின் நெக்லேசைக் கழற்றுகிறார். (இடையிடையே குதிரைச் சண்டை வேறு, எந்த முகாந்திரமுமின்றி) கற்பனையைக் கழற்றிவைத்துவிட்டார் மணிரத்னம்.
//
ஒவ்வொருவர் பார்வைக்கும் ஒவ்வொரு விதமான அர்த்தம் தோன்றும் ஒரு சில காட்சிகளில்.. பெரும்பாலும் மணிரத்னத்தின் படக் காட்சிகள் எளிதில் புரியாது ஒரு சிலருக்கு. அந்த மாதிரி தான் இதுவும் என்பது என் கருத்து. (கோபிச்சுகாதீங்க-- மொத்ததில நான் சொல்ல வந்ததை மணிரத்னம் ஸ்டைல்ல சொல்லிட்டேன்(நல்லா யோசிங்க யோசிங்க) )
மனிரத்னம் பற்றி விமர்சனமா - நிறைய சொல்லலாம்.
ஆனால் இந்தப்படம் பொருத்த வரை பப்படம் அல்ல.
நல்லவரா கெட்டவரா - தினம் கொல்லும் இவர்கள் நல்லவரா கெட்டவரா - இது நல்ல கேள்வி.
கதையின் நாயகன் என்று ஆன பிறகு அவன் செய்வதே சரி.
நாம் அங்கே கதையின் நாயகன் ஆகி விடுகிறோம்.
தமிழில் மட்டுமே சொல்ல வேண்டுமானால் ஆண்டி ஹீரோயிஸம் வைத்து எத்தனை படங்கள்.
மொத்தத்தில் நமது இரசனைகள் சரியில்லையோ.
ஏதாவது புரியமாதிரி இருக்கா
என்னாது தாஜ்மகாலை கட்டி முடிச்சிடாங்களா?
என்னது சோழ இளவரசன் கால் தீயில கருகிடுச்சா ?
அப்படி என்றால் இனிமே அவனை கரிகால் சோழன் என்றே அழைக்கலாம்...
ஓக்கே ???
ரமேஷ் வைத்யா...
சாரி சும்மா ஜாலிக்கு..
மற்றபடி பாடலுக்கு தகுந்த இசை அமைப்பதில் மணி ரத்னம் ஒரு பூச்சியம்...
பாம்பே படத்தில் ஏர் ஆர் ரகுமானின் இசை ஹம்மா ஹம்மா என்று துள்ளி விளையாடும்...
பாட்டை கேட்டுவிட்டு ஒரு மிக பிரம்பாண்டமான அற்புதமான நடன அசைவுகளை கற்பனை செய்திருந்தேன்....
மிக மொக்கையாக டொங்கன் மாதிரி எடுத்திருந்தார் மணி..
எனக்கென்னவோ மும்பை தீவிரவாத தாக்குதலை வைத்து இன்னேரம் கதை பண்ண ஆரம்பித்திருப்பார் என்றே தோன்றுகிறது...
அதில் தான் நாலு துட்டு தேத்தமுடியும் என்று தெரியும் அவருக்கு...
ச்சின்னப்பையன் அண்ணா,
வெல்கம்.
பூர்ணிமா சரண் அவர்களே,
வணக்கம்.
அதிரையார்,
புரிஞ்சிடுச்சு... புரிஞ்சிடுச்சு....
சந்தோஷ்,
தாஜ்மகாலை முடித்துக்கட்டிய பாரதிராஜாவை அணுகவும்.
செந்தழல் ரவி,
வருக, சோழனின் கால் கருகும்வரை செந்தழல் என் பக்கத்துக்கு வரவே இல்லையே...
டொங்கன் மணிரத்னம்... அச்சச்சோ அப்பிடியெல்லாம் திட்டக்கூடாது. கிகிகி....
//சந்தோஷ்,
தாஜ்மகாலை முடித்துக்கட்டிய பாரதிராஜாவை அணுகவும். //
தல,
அவரு அதை இடிச்சவரு.. கட்டினவர் இல்ல...
சூடான இடுகைல டாப் ஒன்!
சிங்கம் சிங்கம்தாங்க!
(இது - உங்களுக்கும், ரஜினிக்கும்!)
ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யேன்?
:-))
//
(இடையிடையே குதிரைச் சண்டை வேறு, எந்த முகாந்திரமுமின்றி)//
ரஜினியை ஒரு அடிதடி ஆளாகத்தான் நம் கண்முன் நிறுத்தியிருப்பார்...ஆனால் நாயகிக்கு அவர் ஒரு மாபெரும் வீரனாக தோன்றுவதாகக்கூட இருக்கலாமே..
தளபதி தளபதிதான்..
ரஜினி ரஜினிதான்..
(நீங்க நீங்கதான்..
நான் நாந்தான்..அதுவேற..)
மாற்று கண்ணோட்டம்!
முன்பு வந்த மணிரத்த்னத்தின் படங்கள் பெரும்பாலும் கொலையை நியாயப்படுத்துவதாக தான் இருந்தன.
இன்றும் சில இயக்குனர்கள் அதை தான் செய்கிறார்கள்.
அதில் தான் நாலு துட்டு தேத்தமுடியும் என்று தெரியும் அவருக்கு...
ரமேஷ் அண்ணா, இப்படிப் போகிற போக்கில் சொல்லிவிட படைப்பாளியா மணிரத்னம்? தமிழ் சினிமாவிற்கு நவீன முகத்தைக் கொடுத்தவர்களுள் மணிரத்னத்திற்கு இடமில்லையா?
கடந்த வாரம் முழுக்க அடியேன் பெற்ற மொத்தக் கமெண்டுகள் 15. பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் ஐம்பது முதல் அறுபது. அவ்வளவு கேவலமாகவா எழுதுகிறேன்? அல்லது உலகோடு ஓட்ட ஓழுகவில்லையா? புரியவே இல்லை.
//டைரக்டர் மணிரத்னத்திற்கு இந்தப் படம் ஒரு படி பின்னடைவு.
உண்மைதான். :(
PALYA PADATTHUKKALAM EDUKKUYYA VIMARSAMNA EZHUDHURINGA PUDUSEDAVADHU NALLA VISAYAMA KUDUNGA
You take a movie. Then we will talk!
Post a Comment