''இந்த பிரெக் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக் குடுங்க. ஒரு லாரியை நசுக்கத் தெரிஞ்சேன்" என்றபடி தர்மராஜிடம் என் மொபெட்டை ஒப்படைத்தேன். அவர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி இல்லை. வழக்கம்போல் நானும் இப்போதெல்லாம் அவர் முகத்தில் சிரிப்பை எதிர்பார்ப்பதில்லை. பள்ளிக்கூட நட்பும் ஒயின் பார் உறவும் எங்களிடம் ஏற்படுத்தியிருந்த நெருக்கம் சமீபகாலமாகச் சிறிது மாற்றத்துக்குள்ளாகியிருந்தது.
தர்மராஜின் டிரேட் மார்க் ஆன புன்னகை கொஞ்சகாலமாகவே காணாமல் போயிருந்தது. இந்த 'கொஞ்ச காலமாக' என்பதை சரியாக ஆறு மாதமாக என்றும் சொல்லலாம்.
ஆறு மாதத்துக்கு முன்னால்தான் தன் மெக்கானிக் ஷெட்டுக்கு, பிள்ளை சுரேஷைக் கூட்டிக்கொண்டு வந்து ஸ்பேனர் கொடுத்து தொழில் கல்வி ஆரம்பித்தார்.
"எட்டு வயசுப் பையனைப் போயி..." என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் முதல் ரேங்க் வாங்கும் பையன்... "நல்லாப் படிச்சு என்ன புண்ணியம்? படிச்ச ஆளுங்க படுற பாட்டைத்தான் பார்க்கிறோமே... நல்லா டைட் பண்ணுடா டேய்" என்று கோச்சிங்கில் மும்முரமாகிவிட்டார்.
கொஞ்ச நாள் எனக்கு கஷ்டமாக இருந்தாலும் பிற்பாடு பிரமித்துப் போனேன். மூணே மாதத்தில் அந்த அளவு தொழில் சுத்தம். என் லொடுக்கு மொபெட்டை ஒருநாள் என் மச்சினன் எங்கேயோ கொண்டுபோய் அக்குவேறு ஆணிவேறாகக் கொண்டுவந்து கொடுக்க... வெறும் மூன்று மணி நேரத்தில் வண்டியை மீண்டும் உயிர்த்தெசவைத்தான் அந்தச் சின்னப் பையன்.
மறுநாள் தர்மராஜிடம் பாராட்டாகச் சொன்னதற்கு'ப்சு' என்றார். ''என்ன தொழிலோ போங்க" என்று அலுத்துக்கொண்டார். 'பையன் தொழிலை ஒழுங்காகக் கற்றுக்கொள்ளவில்லை' என்று அவர் நினைப்பது புரிந்தது. உண்மையிலேயே அவன் கைதேர்ந்த தொழில்காரனாக வருவான் என்று எனக்குத் தோன்றியதை அவருக்குப் புரியவைக்கும் முயற்சியில் தோற்றுப்போனேன். நான் போகும்போதெல்லாம் என்னிடம் தன் பையனின் தொழில் அறியாமையைப் பற்றிப் புலம்பித்தீர்ப்பார். அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க நேரமில்லாத குறை. நானும் ரொம்ப அலட்டிக்கொள்வதில்லை.
இன்றைக்கும், "நீ போயி சாருக்கு டீ வாங்கிட்டு வா. நானே ப்ரேக்கை அட்ஜஸ்ட் பண்ணிடுறேன்" என்று பையனை அனுப்பிவிட்டு "என்ன பையனோ போங்க" என்று தன் வழக்கமான் புலம்பலை ஆரம்பித்தார்.
"ஏங்க, என்னோட ஃப்ரெண்ஸ் ரெண்டு மூணு பேரு உங்க பையனோட வேலையைப் பத்தி ஆஹா ஓஹோன்னு பேசிக்கிறாங்க. உங்களுக்குப் பொறாமை போலிருக்கு" என்றேன்.
"சும்மா எனக்கு ஆறுதலா இருக்கட்டுமேன்னு சொல்றீங்க. தலையால தண்ணி குடிச்சு கத்துக் குடுத்தும் அவன் மண்டையிலே தொழில் ஏறமாட்டேங்குது. எம்முன்னால ஒரு 'நட்'டைக் கூட அவன் சரியா முடுக்கினதில்லை. ஸ்பேர் பார்ட்ஸ் ஃபிட் அப் பண்ணிக் குடுடான்னா அந்த பேப்பர்ல அச்சடிச்சிருக்கிறதைப் படிச்சுக்கிட்டே இருக்கான். படிக்கிற பையனுக்குத் தொழில் சரிப்பட்டு வராதுங்கிறது சரியாத்தான் போச்சு. எக்கேடோ கெட்டுப்போறான்னு திரும்பவும் அவனைப் பள்ளிக்கூடத்திலேயே போடரதுன்னு முடிவு பண்ணிட்டேன்.." தர்மராஜ் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காபியோடு வந்த அந்த சுட்டிப்பையன் எனக்கு மட்டும் தெரியும்படி என்னைப் பார்த்துக் கண்ணடித்தான்.
ஓஹோ... அப்படியா சங்கதி?
43 comments:
\\''இந்த பிரெக் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக் குடுங்க. ஒரு லாரியை நசுக்கத் தெரிஞ்சேன்\\
இது வைத்யா டிரேட்மார்க்
:))
மிக திறமையான முடிவு ... :)
விகடனில் வெளியான நாளிலேயே இதைப் படித்திருக்கிறேன். இதை இன்றளவும் (ஒரு 10/12 வருடங்களிருக்காது?) ஞாபகம் வைத்திருப்பதே இதன் சிறப்பை உணர்த்தும் என்று நினைக்கிறேன்!
இணையத்தில் நிறைய எழுதுங்கள்! பரிசலைப்போல நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்!
அன்புடன்
வெங்கட்ரமணன்
ஐயையோ என்ன இது.. என்னைக் காப்பாத்துங்க
அந்த பையன் இப்போ என்னவா இருக்கான்?
கண்டிப்பாக மெக்கானிக் செட் வைக்காமலிருக்க வாழ்த்துக்கள்!
enna natagutu ingkee?
enna kodumai ithu vaithyaa saar!
Ramesh Vadiya sir is any problem between you and para sir? Even if so, you do not have to discuss in public. But moderate the comments. People play like wild monkeys in the mango garden.
முரளிகண்ணன் அண்ணா,
சில வாசிப்புகளிலேயே என்னைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். நன்றி.
கார்க்கிக்கு நல்வரவு.
இரவீ,
நீங்கள் நுணுக்கமாக வாசிப்பவர் போலும். நன்றி.
வெங்கடரமணன்,
உங்கள் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது.
ஜ்யோவ்ராம் அண்ணா,
நீங்கள் போட்டிருப்பது கதை விமர்சனமா, அனானிகளின் அக்கப்போர் பற்றியா? கதையைக் காறித்துப்பியிருந்தால் தெரிவிக்கவும். நன்றி.
ஹாய் வால்ஸ்!
35 கமென்ட்டா என்று பார்த்தால்... அடடா அனானிகள்.
நரேஷ்,
நானும் பாராவும் நண்பர்களே. கருத்து வேறுபாடு இருந்தால் கூட, நீங்கள் சொன்னது போல, இந்த தளத்தில் ஏன் விவாதிக்கப் போகிறோம். நன்றி நரேஷ்.
ரமேஷ் வைத்யா அண்ணா (ஆங், சந்துல என்னை அண்ணான்னா விட்றுவமா?) அது கதை + பின்னூட்டங்களுக்கானது :)
என்னை சுந்தர் ரவுடி என்று பின்னூட்டம் போட்டவர் நேரில் வந்தால் அவர் கொட்டைகளை நறுக்கி நான் ரவுடியில்லை என நிரூபிக்கச் சித்தமாயிருக்கிறேன் :)
//
இணையத்தில் நிறைய எழுதுங்கள்! பரிசலைப்போல நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்!//
வைஸ்வெர்சா படிக்கவும்!
//Comment deleted
This post has been removed by a blog administrator.
//
Sir, இந்த இடத்தில் இதுக்கு முன்னாடி என்ன இருந்தது??
இந்தக் கதையை இதுக்கு முன்னாடி படிச்சிருக்கேனே..விகடன்ல வந்ததுதானே ? அப்பவே பாராட்டணும்னு நெனச்சேன் உங்களை..அருமையா இருக்கு ரமேஷ் ஜி :)
//அவர் கொட்டைகளை நறுக்கி நான் ரௌடி இல்லை என்று நிரூபிப்பேன்//
ரொம்ப சரி. இனி நான் உங்களை சாது சுந்தர் என்றே விளிக்கிறேன்.
//வைஸ் வெர்ஸா படிக்கவும்//
'பரிசலைப்போல் எழுதுங்கள். இணையத்தில் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்' என்றா? என்ன ஆணவம்..?
கார்த்திகேயன் ஜி,
எல்லாம் கிடக்க உங்களுக்கு இந்தக் கவலையா?
சரி, மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். ஒரு அனானி எங்கிருந்தோ எடுத்த ஒரு கட்டுரையை இங்கே(யும் இன்னும் சில வலைப்பக்கங்களிலும்) பேஸ்ட் செய்துவிட்டார். உடனே அதற்கு பல அனானிகள் எதிர்வினை ஆற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இன்னைக்கு அத்தனையும் அழித்ததில் எனக்கு நல்ல வேலை. ஹ்ம்ம்...
ரிஷான்,
நீங்கள் பாதி சரி, பாதி தப்பு.
கதையைப் படித்திருக்கிறீர்கள். அது என் வேறு புனைபெயரில் வந்தது.
thanks for the visit.
:))
Post a Comment