Friday, February 6, 2009

அஞ்சுக்கு எத்தனை?

வளவளவென்று எழுதும் வழக்கமுள்ள நிருபரை ஆசிரியர் ஒருநாள் கன்னாபின்னா திட்டிவிட்டார். சில நாட்களில் ஒரு காரின் பெட்ரோல் டாங்க் வெடித்து ஐந்து பேர் இறந்து போய்விட்டார்கள். இந்தச் செய்தியை அந்த ரிப்போர்ட்டர் இப்படி ரிப்போர்ட் செய்தார்: 'ஐந்து பேர் பயணித்த காரின் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று தீக்குச்சி கிழித்துப் பார்த்தார் ஒருவர். இருந்தது.'

கேள்வி பதில் பகுதிக்கு:
இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே என்?

எமதர்பாருக்கு மனிதன் ஒருவன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். எமன் வேறு ஏதோ கணக்கு வழக்குப் பார்த்துக்கொண்டிருந்ததால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கிருந்த உலகப்படத்தில் இந்தியாவில் டெல்லி பகுதியில் இரண்டு சிவப்பு விளக்குகள் எரிந்துகொண்டு இருந்தன‌. மனிதனின் திகைப்பைப் பார்த்த எமன், "யாராவது பொய் பேசினால் அந்த இடத்தில் சிவப்பு விளக்கு எரியும். இப்போது பிரதமரும் ஜனாதிபதியும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். " சற்று நேரத்தில் இந்தியா முழுக்க சிவப்பு விளக்கு எரிந்தது. பதறிப்போன மனிதனிடம் எமன் சொன்னான்: "இப்போது டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கிறார்கள்."

குற்றவாளி மரண தண்டனை அனுபவிக்க வேண்டிய இடத்தை அடைய முழங்கால் அளவு சேற்றைக் கடந்து போகுமாறு அமைத்திருந்தான் அரசன். அதைக் கடக்கும்போது, "சே, என்ன கொடுமை... என்னை நேரடியாத் தூக்கில் போட்டிருக்கலாமே..." என்றான் குற்றவாளி.
அதற்கு உடன் வந்த காவலன் சொன்னான், "உனக்காவது ஒரு தடவையோட போச்சு. நான் திரும்பி இதே பாதையில நடக்கணும்ங்கிறதை நினைச்சுப் பார்த்தியா?"

இன்டர்வியூ அதிகாரி: கஷ்டமான ஒரு கேள்வி கேட்கவா, ஈஸியான ரெண்டு கேள்வி கேட்கவா?
இன்டர்வியூவுக்கு வந்த நாதாரி: கஷ்டமான ஒரு கேள்வி.
இ.அ: கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?
இ.வ.நா.:கோழி.
இ.அ.: எப்படிச் சொல்கிறாய்?
இ.வ.நா.: சார், ஒரு கேள்வி.....


அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்?
யாரவது பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

19 comments:

Karthikeyan G said...

//அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்?
//

தெரியல..

முரளிகண்ணன் said...

அண்ணா அசத்தீட்டங்கண்ணா.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே என்?/

அதான, ஏன்?

கார்க்கி said...

//
அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்//

ஸீரோக்குள்ள ஒன்னு போகும். அது தெரியும்? இது எப்ப்டி தல?

கார்க்கி said...

/இதுவரை உங்களுக்கு 98 கெல்விகள் அனுப்பியிறுக்கிரேன். என்று கூட பிராசுறமாகவில்லையே எ//

யாரூ சேய்த ச்தீ?

narsim said...

//"உனக்காவது ஒரு தடவையோட போச்சு.//

kalakkal

அனுஜன்யா said...

அட்டகாசக் கலக்க்ஷன். அதோட நிறுத்தக்கூடாதா? இப்பக் கேள்வி கேட்டு மண்ட காயுது. சீக்கிரமா பதிலச் சொல்லுங்க. நாங்க எல்லாம் கணக்குல (யும்) வீக்.

//யாரூ சேய்த சதீ?// அதானே?

அனுஜன்யா

வால்பையன் said...

கம்பேனி சீக்ரெட் வெளியிடகூடாது!
அதுவும் முக்கியமா நான் எழுதிய கடிதங்கள் வெளியிடக்கூடவே கூடாது!

Karthik said...

நைஸ். :)

//அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்?

கார்க்கி சொன்னதை வழி மொழிகிறேன்.
:))

வால்பையன் said...

//இப்போது டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கிறார்கள்."//

இதை தமிழில் எழுதுக:

இப்போது தொலைக்காட்சி பெட்டியில் பொய்திகள் வாசிக்கிறார்கள்

வால்பையன் said...

//அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா என்ன வரும்? //

ஸாரி கணக்குல நான் ரொம்ப வீக்கு!

பாபு said...

அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா ??

மஹாபாரத போர் வரும் ,(அஞ்சு சகோதரர்களுடன் பாஞ்சாலியும் சேர்ந்தா )
தப்பா நினைக்காதீங்க ,நமக்கு இப்படித்தான் தோனுச்சு,அதுக்கே மூளைய ரொம்ப கசக்கிட்டேன்.

ரமேஷ் வைத்யா said...

கார்த்திகேயன் ஜி,
எனக்கும் தெரியலை. நானும் பச்சப்புள்ள.

முரளிகண்ணன்,
அப்படியானால் நானும் கார்க்கி, பரிசல், வடகரைவேலன் இன்னொரு பெயர் சொல்வேன் கோவிக்கக்கூடாது, லதானந்த் மாதிரி யூத்துதான்.

ஜ்யோவ்ராம் சுந்தர்,
இதற்கு 'ஐய்யோ கொல்றாங்களே" என்று கத்தாமல் இருந்டீர்களே அதுவே பிக் சமாச்சார். நன்றி.

கார்க்கி,
அண்ணன்கிட்டே என்ன பேச்சு இது? பிச்சுப் புடுவேன் பிச்சு! இன்றைய பாவிப்பய ஏழு காக்டெயிலைக் கலக்கிட்டானேய்யா...

நர்சிம்,
நன்றி.

அனுஜன்யா,
நீங்களும் நம்ம வயசுள்ள யூத்துதான் போலருக்கு. (ப்ரைவேட், நோ பப்ளிஷிங்)

வாலு, கடிதமே எழுதலையேப்... ஓ அதா? ஓக்கே!

கார்த்திக்,
வால் பையன் சொன்னதை வழிமொழிகிரறேன்: அது கம்பெனி ஜீக்ரெட்.

பாபு,
முதல் வருகையா? தெரியலை. லேட்டரல் திங் கிங்!


அச்சச்சோ அவ்வளவு பேருதானா? ச்சின்னப்பையன் பாணியில் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

த.அகிலன் said...

யப்பா. அட்டகாசம்யா.. அஞ்சுக்குள்ள ஒண்ணு போனா அப்படி என்னதான்யா வரும்..

ஆ! இதழ்கள் said...

அஞ்சுல ஒண்ணு போனானு கேட்டா தெரியும். அஞ்சுக்குள்ளனா?

ரொம்ப மூளை இருக்கவேண்டிய எடத்தை கசக்கியாச்சு ஒண்ணும் தெரியல. கடைசில கேள்வியே தப்புனு சிரிச்சுறாதீங்க பாசூ கொலவேறியோட இருக்கோம். :(

:)

ரமேஷ் வைத்யா said...

அகிலன், ஆ! இதழ்கள்,
வந்ததற்கு வந்தனம். கார்க்கியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள், போனில்..! ஹிஹி...

பரிசல்காரன் said...

அருமை.

அட்டகாசம்..

ஆஹா.. ஓஹோ..

அஞ்சுக்குள்ள ஒண்ணுபோனா... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

ஃபோன்ல சொல்லுங்க./

அதிஷா said...

ஆறுவருமா..

ஒண்ணு சின்னதுதான அஞ்சுக்குள்ள போகும்..

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல் அண்ணே...:)