Monday, February 16, 2009

எல்லாம் தெரிந்தவன்!

'நந்தினியிடம் இன்றைக்கே ஐ லவ் யூ சொல்லிவிடலாம்' என்று தீர்மானித்துக்கொண்டான் பரத். அவனைப் பற்றி முதன்முதலில் உள்ளூர்ப் பத்திரிகையில் எழுதியவள் நந்தினி. 'உலகின் அதிசய மனிதன்... எதைப்பற்றிக் கேட்டாலும் பதில் சொல்கிறார். உலகின் அதிக டேட்டாபேஸ் உள்ள கம்ப்யூட்டருக்கு இந்தியாவின் மனிதச் சவால்!' என்று எழுதியிருந்தாள்.

உண்மையில் பரத் அதற்கு முழுக்கத் தகுதியானவன். அது எப்படி என்று தெரியவில்லை, பதினைந்தாவது வயதில் 'அந்த'த் திறமை தனக்கு இருப்பதை உணர்ந்தான். யார் எதைக் கேட்டாலும் அதற்கான பதில் இவனுக்கு சந்தேகமில்லாமல் மூளையில் பளிச்சிட்டது. 'தாமிரத்தின் வேதிக்குறியீடு என்ன?' செக்கோஸ்லோவேகியாவில் எத்தனை மாகாணங்கள்? இடைக்காலச் சோழர்களில் தாவர விரும்பியான மன்னன் யார்? பதினொன்றின் வர்க்க மூலம் என்ன?சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?செஸ்ஸில் கார்ப்போவ் இதுவரை தேசிய லெவலில் எத்தனை முறை வென்றிருக்கிறார்..?'

எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான். 'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின. ஞாபக சக்க்தியை அதிகரிக்கச் செய்யும் ஸிரப் தயாரிக்கும் மருந்து கம்பெனி இவனை விளம்பரத்தில் நடிக்க வைப்பதற்காக இவன் வீட்டுக்கு நடையாய் நடந்தது. அரசியல் கட்சிகள் இவனைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு ஆதாயம் தேட அலைந்தன.

இது மறுபிறவியா, வேறு ஏதாவதா என்று இவனே ஐந்து வருடங்களாகக் குழம்பிக்கொண்டிருக்க, தற்செயலாகச் சந்தித்த நந்தினி ஒரு பிரபல மனோதத்துவ நிபுணரிடம் இவனை அழைத்துச் சென்றாள். "இந்தத் திறமை எப்படி வந்ததுனு யோசிக்கிறதை மட்டும் நிறுத்திடுங்க. .மத்தபடி குழப்பம் எதுவும் இருக்காது..." என்று சொல்லிவிட்டார் டாக்டர்.

அப்போது இவனைப் பற்றிப் பத்திரிகையில் எழுதியதுடன், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவனைச் சந்திக்க வந்துவிடுவாள் நந்தினி. மாலை ஐந்து மணிக்கு வந்தால், ராத்திரி பத்து மணிக்குத்தான் போவாள். இவனைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு கேள்விகள் கேட்க வருகிறவர்களை, ஓகே! நாளைக்கு வாங்க. மணி பத்தாச்சு" என்று விரட்டுவாள்.

'ரொம்ப நல்ல பொண்ணு' என்று இவன் நினைத்துக்கொண்டிருந்த போதே, ''ஹாய் டியர்..." என்றபடி நந்தினி நுழைந்தாள்.
அவளுக்கு ஒரு பரிசு கொடுப்பவன் போன்ற தொனியில், "நந்தினி... நம்ம கல்யாணத்தை எப்ப வெச்சுக்கலாம்..?" என்றான் பரத்.

அவ்வளவுதான் படபடவென்று பொரிந்துவிட்டாள் நந்தினி. அவள் பத்து நிமிடம் படபடத்ததன் சாராம்சம் இதுதான்.
"நான் உன்கூட ஃப்ரெண்ட்லியாகத்தான் பழகினேன். ஒரு பெண்ணின் மனசைப் புரிந்துகொள்ள முடியாத முட்டாள். வடிகட்டின முட்டாள்...

19 comments:

Cable Sankar said...

பொண்ணுங்களோட மனசை மட்டும் தெரிஞ்சிருச்சுன்னா... உலகத்துல ஆச்சர்யங்களே இல்லாம போயிடும் தலைவரே..

கார்க்கி said...

ஆறும் அது ஆழமில்ல-அது
சேருன் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா..
அந்த..


அதெல்லாம் சரி? ஏன் தல நந்தினி பேரு?:)))

பாலு சத்யா said...

பின்றியே மாப்ள. தூள் கெளப்பு.

பாலு சத்யா

ரமேஷ் வைத்யா said...

* கேபிள் சங்கர்,
வருக வருக.

கார்க்கி,
நந்தினி யில என்ன விசேஷம்? தற்செயலா வெச்ச பேர்தான் அது.

பாலு சத்யா,
முதல் வருகைக்கு நன்றி.

கார்க்கி said...

இல்ல தல..

http://www.karkibava.com/2009/02/blog-post_15.html

இந்தப் பதிவு முழசா படிக்க முடியலன்னாலும் கடைசி வரியை படிங்க. நேத்துதான் எழுதினேன்

பரிசல்காரன் said...

நான் கூட என்னைப் பத்தி ஏதாவது எழுதியிருக்கீங்களோன்னு வந்தேன்!

பரிசல்காரன் said...

ஸாரிங்க.. போன கமெண்டுக்குப் பின்னாடி ‘கி..கி..கி..’ போட மறந்துட்டேன்!

ரமேஷ் வைத்யா said...

karki,
I read it already. I wrote this story some 8 years back.

parisal,
கை வசம் நிறைய கிகிகி தட்டி வைத்துக்கொள்ளவும்.

கார்க்கி said...

/பரிசல்காரன் said...
நான் கூட என்னைப் பத்தி ஏதாவது எழுதியிருக்கீங்களோன்னு வந்தே//

ஆமாம் சகா.. எப்பவுமே தல இப்படித்தான் தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லாம எழுதுவாருன்னு நானும் நினைச்சேன்

நையாண்டி நைனா said...

/*சன் டிவியிலிருந்து ஸ்டார் டிவி வரை இவன் பேட்டியை ஆர்வமாய் ஒளிபரப்பின.*/

கற்பனை வளம் வேணுந்தான் அதுக்காக இப்படியா?

இதில் இருந்தே தெரிஞ்சு போச்சு இது ஒரு நம்ப முடியாத கதை என்று.

* * * * * * * * * * * * * * * * *

எம்.எம்.அப்துல்லா said...

//எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான் //

ப்ப்ப்பூ...இது என்ன பிரமாதம்??? நான் கூடதான் நீங்க எந்தக் கேள்வியக் கேட்டாலும் ”டக்!டக்!” அப்பிடின்னு பதில் சொல்லுவேன் :))))

எம்.எம்.அப்துல்லா said...

//எதைக் கேட்டாலும் டக் டக் என்று பதில் சொன்னான் //

நீங்க கூடதான் எந்தக் கேள்வியக் கேட்டாலும் பெக்!பெக்! அப்பிடின்னு சொல்லுறீங்க :))))

முரளிகண்ணன் said...

நச். அப்துல்லா இங்கயுமா?

ரமேஷ் வைத்யா said...

இந்த அபுதுல்லாவை ஏதாச்சும் செய்யணும் பாஸ்...

ரமேஷ் வைத்யா said...

கார்க்கி,
ஒழுங்கு மரியாதையாக இருக்கவில்லையென்றால் 'அனிதா கார்த்திக்' பட ஆடியோ சிடி அனுப்பிவைத்துவிடுவேன்.

வால்பையன் said...

//எல்லாம் தெரிந்தவன்!//

அண்ணே முதல்ல கண்ணாடியை மாட்டுங்கண்ணே!
நீங்க உட்கார்ந்துகிட்டு இருக்குறது உங்க கணிணி இல்ல!

வால்பையன் said...

//சந்தன வாசனையோடு கூடிய கழிவை வெளியேற்றும் காட்டுப் பன்றி ஆப்பிரிக்காவின் எந்தப் பகுதியில் இருக்கிறது?//

வெளியே சொல்லிறாதிக,
நம்ம ஆளுக அதையும் வித்து காசாக்கி புடுவாங்க

வால்பையன் said...

'பரத் ஆராய்ச்சிக்குரிய ஒரு மனிதப் பொக்கிஷம்' என்று ஆங்கிலப்ப் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. //

இதுக்கு என் பெயரை நீங்க நேரடியாகவே எழுதியிருக்கலாம், இப்பவே ஏகப்பட்ட போன்கால்கள்

வால்பையன் said...

முடிவு ஜூப்பருங்கோ!

ஆனால் எனக்கு நடந்தது உங்களுக்கு எப்படி தெரியும்!

சும்மா விளம்பரம்