Tuesday, March 31, 2009

தண்ணிலை விளக்கம்!

பழைய நண்பர்கள் மன்னிக்கவும். இது என் புதிய நண்பர்களுக்காக (சரித்திரம் இம்பார்ட்டன்ட் தானே...)


இருக்கும் வரை சுகிக்கும் கலை
படிக்கும் ஒரு மாணவன்
இனிக்கும் பொருள் அனைத்தும் தொடத்
துடிக்கும் பெரும் காமுகன்

பனிக்கும் எரி மலைக்கும் இடை
நடக்கும் ஒரு சாகசன்
கிடக்கும் தெரு கடக்கும் நொடி
திகைக்கும் சிறு மானுடன்

சிரிக்கும் மலர் தெறிக்கும் இசை
ரசிக்கும் நல் காதலன்
குடிக்கும் நொடி வழுக்கும் மொழி
பிதற்றும் ஒரு கேவலன்

வெறுக்கும் விருப் பிருக்கும் என
தினைக்கும் உன் ஞாபகம்
திறக்கும் விழி இமைக்கும் செயல்
மறக்கும் உன் பேரெழில்

சிரிக்கும் இதழ் முறைக்கும் விழி
இனிக்கும் நீ ஓவியம்
உனக்கும் அடி எனக்கும் வரும்
பிணக்கும் ஒரு நாடகம்.

26 comments:

முரளிகண்ணன் said...

அண்ணா அசடத்தீட்டங்கண்ணா

மண்குதிரை said...

ஓசை நல்லா இருக்கு.

பாட்டு எழுதப்போறீங்களா?

ரமேஷ் வைத்யா said...

மின்னல் பிராண்ட் முரளிகண்ணனுக்கு நன்றி.

ரமேஷ் வைத்யா said...

வருக மண்குதிரை. நான் பாட்டு எழுதற ஆசாமிதான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தலைப்பை ரசித்தேன்!

வால்பையன் said...

அண்ணே இந்த பாட்டு எந்த படத்துல வருது! ஒருவேளை இனிமே தான் வருதா?

ரமேஷ் வைத்யா said...

ஜ்யோவ்ராம் சுந்தர்,
வணக்கம். ஹிஹி...

வால்பையர்,
இது சும்மா கிறக்கத்தில் எழுதி ஆவியில் வெ... வந்தது. : )

குசும்பன் said...

அவ்வ்வ்வ் சுந்தோர்ஜீ கூட சேராதீங்க சேராதீங்கன்னா கேட்குறீங்களா?

இருந்தாலும் முழுவது இரு முறை கேப் விட்டு கேப் விட்டு அடிச்சால் ச்சே... படிச்சால் தெளியுது ச்சே... புரியுது:)

குசும்பன் said...

//சும்மா கிறக்கத்தில் எழுதி ஆவியில் வெ... வந்தது. : )//

படிச்சதில் பாதி என் ஆவி வெளிவந்தது:)

narsim said...

தண்ணிலை வி’ழ’க்கம் அருமைண்ணா

நொருக்கும் தமிழ் சுரக்கும் என
இருக்கும் ஒரு பண்டிதன்
படிக்கும் பொருள் அனைத்தும் தொடத்
துடிக்கும் பெரும் வாசகன்

புல்நுனிக்கும் வான்வெளிக்கும் இடை
நடக்கும் ஒரு வித்யாசன்
படிக்கும் படி நடக்கும் ஒரு
கோமகனே..வாழ்க நீ இன்னும் ஈர் நூறாண்டு

தமிழ் பிரியன் said...

அசத்தல்!

ரமேஷ் வைத்யா said...

குசும்பரே,
சுந்தோரே எங்குடா சேர மாடாரு.
சரீ, நெல்லா இருக்கா, இலியா

நர்சிம்,
ஹைஸ்பீடு எக்ஸ்பிரஸா இருக்கு...

ரமேஷ் வைத்யா said...

தமிழ், வணக்கம். நல்லாருக்கிய்ளா? இதி நீங்க முன்னாடியே படிச்சிருப்பியளே...

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
எம்.எம்.அப்துல்லா said...

ஏற்கனவே படிச்சதா இருந்தாலும் இனிக்கிதே....


இரவில் எனை அழைத்தே அடி
கொடுக்கும் ஒரு அண்ணன்
பிதற்றி எனை வருத்திப் பின்
விடுக்கும் தமிழ் மன்னன்.

வாழ்க!வாழ்க!

ரமேஷ் வைத்யா said...

அண்ணே... எனக்கொரு வேலைண்ணே... (நைட் டுட்டியும் ஓ.கே.) :)(

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு.

வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

இத ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டிருக்கேன்.

இப்பவாவது வந்ததுக்கு நன்றி.

இதே போல விஜய் எப்படியாப்பட்டவர், ரஜினி எப்படியாப்பட்டவர் போன்றவற்றையும் எடுத்து எழுதி வெளியிடவும்...

ச்சின்னப் பையன் said...

அசத்தல்!

புருனோ Bruno said...

அண்ணா

கவிதை அசத்தல்

நர்சிம், அப்துல்லா கவிதைகளும் டாப் :) :)

லதானந்த் said...

குடிப்பது உடல் நலத்துக்குத் தீங்கானது.
குடி வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு.
குடி குடியைக் கெடுக்கும்.

செல்வேந்திரன் said...

இந்தக் கவிதைக்கு மெட்டு அமைத்து வைத்திருக்கிறேன். நள்ளிரவு நயாகராவில் கேட்டுக்கொள்ளவும்.

நர்சிம், இன்னும் ஈர் நூறாண்டா.... அப்ப எனக்கு விடிவுகாலம், விடியகாலம் ரெண்டுமே கிடையாதா... :(

ரமேஷ் வைத்யா said...

KRS, Parisal, ச்சின்னப்பையன், டாக்டர், லதானந்த்...
வணக்கம். அடேங்கப்பா ஒரே நட்சத்திரக் கூட்டமாக இருக்கிறதே...
செல்வேந்திரன்,
காத்திருந்து லதானந்த் வந்துவிட்டுப் போன பிறகு 'விடிய காலம்' என்று எழுதுகிறாயா..?

கார்க்கி said...

//உனக்கும் அடி எனக்கும் வரும்
பிணக்கும் ஒரு நாடகம்.//

வாவ்.. வா வாத்யாரே..

லக்கிலுக் said...

அபாரம்!

வண்ணத்துபூச்சியார் said...

அட, நல்லாயிருக்கு.

வாழ்த்துகள். நிறைய எழுதவும்.