Sunday, May 10, 2009

சும்மா

இலக்கியத்தின் பிரபஞ்சத்துவம் எது?

இனம், மதம், மொழி, இடம் என்று மனித குலம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தீவிரவாதம், உலகமயமாதல்... பழைய மதிப்பீடுகள் அசையத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தீவாகிக்கொண்டிருக்கிறான். இந்நிலையில் மனித குலத்தைப் பிணிக்கும் சரடாக இலக்கியம் மட்டுமே இருக்கிறது.

அரசியல் அடுத்த தேர்தலை சிந்திக்கிறது. மதம் அடுத்த ஜென்மத்தைச் சிந்திக்கிறது. இலக்கியம்தான் நேற்று இன்று நாளை குறித்துச் சிந்திக்கிரது.

எந்த மேகத்திலிருந்து விழுந்தாலும் மழைத்துளி மண்ணுக்கே சொந்தம். எந்த மொழியில் எழுதப்பட்டாலும் இலக்கியம் மனிதனுக்கே சொந்தம். பூமிக்குள் மறைந்து கிடப்பவற்றை அறிவியல் தேடுவது போல வாழ்க்கைக்குள் மறைந்துகிடப்பவ‌ற்றைக் கலை தேடுகிறது.

புல்லாங்குழலுக்குள் புகுந்து வரும் கரியமில வாயு இசையாய் வெளிப்படுவது போல படைப்புக்குள் நுழைந்து வெளிவரும்போது படைப்பாளியின் வலி ஆனந்தமாகிவிடுகிறது.

எல்லாப் படைப்புகளும் இயற்கையின் நிழல் அல்லது வாழ்வின் பிரதி.

நிறங்களை ஆளாத் தெரிந்தவன் ஓவியனாகிறான். சத்தங்களை செதுக்கத் தெரிந்தவன் இசைஞனாகிறான். மொழியை மோகித்தவன் படைப்பாளியாகிவிட்டான்.

வேறு வேறு கண்களால காணப்பட்டாலும் அழகு ஒன்றுதான். வேறு வேறு கண்களால் சிந்தப்பட்டாலும் கண்ணீர் ஒன்றுதான்.

நாகரிகங்களால் பிளவுபட்டுக் கிடக்கும் மனிதர்களைக் கலாசாரத்தால் ஒன்று படுத்தும் கலைதான் இலக்கியம்.

24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி.

நன்றி, வணக்கம்.‌

16 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//

24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி.

//

அப்புறம் ஏன் அன்னைக்கி என்னைப் பார்த்து இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலன்னு சொன்னீங்க? இந்த மனுசன் தொல்லை தாங்க முடியலன்னு சொல்லி இருக்கலாமுல??

இஃகிஃகி :))))

Cable சங்கர் said...

//24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. //

அடிய பின்னிவிட்டீங்க ... சரி நான் அமுத்திக்கிறேன்.

மண்குதிரை said...

ரசித்தேன்.

கார்க்கிபவா said...

//24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது//


கொசு அவ்ளோ நாள் உயிர் வாழுதா தல?

வால்பையன் said...

//அடிய பின்னிவிட்டீங்க ... சரி நான் அமுத்திக்கிறேன்.//

இது அதுவுல்ல!

வால்பையன் said...

மொழி என்ற ஒன்று இல்லையென்றால் மனிதனுக்கு உணர்வுகள் புரிந்து கொள்ளும் சக்தி இருந்திருக்கும்!

ரமேஷ் வைத்யா said...

அட, கடையில் வைக்காவிட்டாலும் வந்து கமென்டிய‌
அப்துல்லா, கேபிளார், மண்குதிரை, கார்க்கி, வால்பையன்
அனைவருக்கும் நன்றி.

selventhiran said...

நான் சோனியாவைப் பார்த்துக்கேட்கிறேன்....

கலையரசன் said...

//மனிதர்களைக் கலாசாரத்தால் ஒன்று படுத்தும் "கலைதான்" இலக்கியம்.//

என்னை பாராட்டியதற்க்கு நன்றிங்கண்ணோவ்!
சும்மா,.. சும்மா...

மேவி... said...

"ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. "

ஆமாங்க

Sanjai Gandhi said...

//24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. //

எதும் உள்குத்தா தல? :)

Sanjai Gandhi said...

அப்துல், கேபிள் எல்லாம் வாக்குமூலம் குடுக்கிறத பார்த்தா என்னவோ மர்மமா இருக்கே.. :)

Sanjai Gandhi said...

// செல்வேந்திரன் said...

நான் சோனியாவைப் பார்த்துக்கேட்கிறேன்...//

அடிங்க.. கொன்னுடுவேன்.. :)

கட்டபொம்மன் said...

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க


கட்டபொம்மன் kattapomman@gmail.com

butterfly Surya said...

ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. "///

நல்ல பதிவு.

There is no need for language to say, "You are in Love" - OSHO

குசும்பன் said...

//24 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்த கொசு இன்னமும் கொசுவாகவே இருக்கிறது. ஆனால் மனிதன் மாறிவிட்டான். காரணம் மொழி. //

அப்ப ஏன் அப்ப இருந்த டைனோசர் மாறிபோய் பெண் ரூபத்தில் வந்திருக்கு?:))

ஆமா ராதாமோகன் இயக்கிய மொழிக்கு அவ்வளோ சக்தி இருக்கா?