Monday, December 8, 2008

பேயெனப் பெய்த மழை


மழை பெய்து முடித்த, ஆனால் சாலைகளில் கெண்டைக் கால் அளவு தண்ணீர் தேங்கிக் கிடந்த அந்த வியாழக்கிழமை இரவு ஏழு மணிக்கு, இந்தத் தண்ணீரால் நேரவிருக்கும் அவஸ்தைகளை என்னால் யூகிக்க முடியவில்லை.
வீட்டுக்குள் சன்னல் வழியாகக் கசிந்த சிறிதளவு ஈரம் மட்டுமே இருந்தது. கரன்ட் (சொல்லவேண்டியது) இல்லை. மெழுகுவத்தி வெளிச்சத்தில் பத்திரிகைகளை மேய்ந்துவிட்டுத் தூங்கப் போய்விட்டேன்.
கட்டிலில் படுத்திருந்த என் மேல் ஏதோ ‘ஜில்’ என்று படர்ந்த ஸ்பரிச உணர்வில் கண்விழித்த நான், அறைக்குள் எழுந்த நாற்றத்தால் முற்றிலும் தூக்கம் கலைந்தேன். தண்ணீர். சாக்கடைத் தண்ணீர்! அது இரண்டரை அடி மட்டத்துக்கு வீட்டுக்குள் சூழ்ந்திருந்ததை உணர முடிந்தது.
மேசை மேல் மெழுகுவத்தி இருந்த இடத்தை மனதுக்குள் குறித்துவைத்திருந்ததால், முழங்காலளவு நீரில் ‘சளப் சளப்’ என குத்துமதிப்பாக நடந்துபோய் அதைப் பற்ற வைத்தேன். மணி ஒன்று ஐந்து. சுற்றிலும் என்ன நடக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை; என்ன செய்வதென்றும்!
‘திடீரென்று எப்படி வந்ததிந்தத் தண்ணீர்..?’ அறையிலிருந்த மேஜை மேல் ஏறி குத்தவைத்து உட்கார்ந்துகொண்டேன். துணைக்கு மெழுகுவத்தி வெளிச்சம் மாத்திரம்! குட்டித் தூண் போன்ற மெழுகுவத்தி. கோழித் தூக்கமும் ஆந்தை விழிப்புமாக மாறி மாறி வந்தது. வீட்டுக்குள் அலையடித்துக்கொண்டு இருந்த கூவத்தில் ஏதோ அசைவு. உலுப்பிக்கொண்டு பார்த்தேன். பிளாஸ்டிக் முக்காலி இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டு சாய்ந்து நின்று, பிறகு தலைகீழாகக் கவிழ்ந்தது. எனக்கு முழு விழிப்பு வந்துவிட்டது.
குளிர் வெடவெடத்தது. கட்டிலின் மேலிருந்த போர்வை முழுக்கத் தண்ணீர் படர்ந்திருப்பது இருளினூடே தெரிந்தது. மேஜையின் காலில் ஏதோ ‘ணங்’ என்று மோதியது. காஸ் சிலிண்டர்! அதை சமையலறையினுள் கொண்டுவைக்க காஸ்காரப் பையனுக்கு எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுப்பேன். அவ்வளவு எடையுள்ள சிலிண்டரை தண்ணீர் மிக எளிதாக சுழற்றி விளையாடுகிறது! மேஜை மேல் இருந்த என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்த சிலிண்டர், மெள்ள மிதந்து நகர்ந்தது.
இப்படி... வாஷிங் மிஷின், டி.வி.டி. பிளேயர், மிக்ஸி, பாத்திரம், பண்டம் என ஒவ்வொன்றாக ஆற்று நீர்ப்போக்கில் மிதந்து வர ஆரம்பித்தன. மேஜை மேல் குந்தியிருந்தநான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன், கையறு நிலையின் உச்சபட்சமாக! உள்ளறையில் ஃபிரிஜ் சாயும் சத்தம் கேட்டது.
என் பதவி என்ன, செல்வாக்கு என்ன, எத்தனை தொடர்புகள்... என்ன செய்ய..? தண்ணீர் விளையாடிக்கொண்டு இருக்கிறது! செல்போனில் சுத்தமாக ஈரம் ஏறி, சத்தமில்லாமல் செத்துப் போயிருந்தது. சாகாத உயரத்தில் வைத்திருந்த மற்றொரு செல்போனில் சார்ஜ் இல்லை. சார்ஜ் போட கரன்ட்..?
இப்படியே கழிந்தது ஐந்து மணி நேரம். காலை ஆறு மணி ஆகியும் நடுராத்திரி போல் இருட்டு. மேகத்தின் கருமை!
எவ்வளவு நேரம்தான் மேஜையே தஞ்சம் என்றிருப்பது? இறங்கிக் கதவைத் திறந்தேன். அதற்கென்றே காத்திருந்தது போல் சரட்டென்று மிதந்து வெளியேறின என் ஒரு ஜோடி செருப்புகள்! எட்டிப் பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுத் தடுமாறியபடியே மெதுவாக வாசலுக்கு வந்தேன். தண்ணீரின் அலைவில் பயந்து ஒரு தண்ணீர் பாம்பு அம்பெனப் பாய்ந்து விரைந்தது. சாக்கடை நீரில் காலை ஊறப்போடுவது அயர்ச்சியைத் தர, மெள்ளப் படியேறி மாடிக்குச் சென்று ‘ஓவர் ஹெட் டேங்க்’கின் மறைவில் அமர்ந்தேன்.
ஏழு மணி. எட்டு மணி. ஒன்பது. பத்து. பதினொன்று... ‘அடுத்து என்ன செய்யப் போகிறேன்?’ பத்து மணி நேரப் பசி வயிற்றைக் கிள்ளியது. வேறு வழியில்லை. ‘ஏதாவது கடை திறந்திருக்குமா? தொண்டைக் குழிக்கு ஒரு மடக்கு காபி கிடைக்குமா...’ இறங்கி வெளியே போகத் தீர்மானித்தேன்.
அடேங்கப்பா... எங்கும் வெள்ளக்காடு..!
தெருமுனை திரும்பி நடக்க... நீர் மட்டம் உயர்ந்துகொண்டே போனது. பாய்ந்து வரும் தண்ணீரை எதிர்த்து நடப்பது நாலு பேரைத் தூக்கிச் சுமப்பது போல் சிரமமாக இருந்தது. தண்ணீரில் ஏதேதோ கழிவுகள் மிதந்து கடந்தன. ‘நீல் மெட்டல் ஃபனால்கா’ குப்பைத் தொட்டி ஒன்று கடப்பாறை நீச்சல் அடித்துப் போயிற்று. மூக்கைப் பொத்திக் கொண்டேன். பெரும் பிரயத்தனத்துக்குப் பின் பிரதான சாலை வந்தது.
சாட்டையாக அடிக்கும் மழையையும் சாக் கடையின் மணத்தையும் தாங்க முடியாமல், இதற்கு எப்போது விடிவு வரும் என்று தெரியாமல் ஏராளமான மனிதர்கள் கைக்குக் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஏரியாகிப்போன ஏரியாவிலிருந்து வெளியேறிக்கொண்டு இருந்தார்கள். ‘‘செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டுட்டாங்களாம். சொல்லாமக் கொள்ளாம இப்பிடிப் பண்ணிட்டானுகளே... நல்லா இருப்பானுக...’’ &சாபமிட்டபடி ஒருவர் தண்ணீரில் தடுமாறியயபடி கடந்தார். பஸ் போகும் பாதையில் ‘ஸ்டீமர் போட்’ போய்க்கொண்டிருந்தது.
அப்பாடி, ஒரு புண்ணியவான் காபி கடை திறந்திருந்தார். ஒரு காபி இத்தனை சுவையாக இருக்குமா..?
சாலை வெள்ளத்தில் ஏகப்பட்ட பேர் போய்க்கொண்டு இருந்தார்கள். இளைஞர், முதியவர், ஏழை, பணக்காரன், ஆண், பெண்... எந்த வித்தியாசமும் இல்லாமல் சாக்கடைக்குள் நீந்தவைத்த அரசை, குப்பையோடு மிதந்த ஒரு காய்ந்த மாலையைப் போட்டுப் பாராட்டத் தோன்றியது.
‘பெருத்த மழை பெய்திருந்தபோதிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை’ என்று அரசாங்கச் செய்தி முரசறைந்தது. அது உண்மைதான்..! மின்வெட்டு, விலைவாசி உயர்வு, போக்குவரத்து நெரிசல் என்று அன்றாடம் செத்துச் சுண்ணாம்பாவதுதானே இயல்பு வாழ்க்கை! மாறுதலுக்கு இந்த முறை தேடி வந்து மூழ்கடிக்கும் ஏரித் தண்ணீர்!
எங்கே தீ எரிந்தாலும் வேலைக்குப் போனால் தானே சோறு! இயல்பு வாழ்க்கை எப்படி பாதிக்கும்?

26 comments:

கார்க்கிபவா said...

தல.. என்ன சொல்றது?:(((( பரிசல் சொல்லித்தான் தெரியும். குட்டிப்பாப்பா அப்போ ஊர்ல இருந்தாங்களா?

Thamiz Priyan said...

:(

வால்பையன் said...

ரொம்பவும் மன வருத்தம் தரும் செய்தி.
அடுத்த முறை வீடு மாற்றும் போது மாடி வீடாக பார்த்து குடியேறுங்கள்.

நமது அரசுக்கு வரும்முன் காப்போம் என்ற வார்த்தை மறந்து விட்டது.

ஆயில்யன் said...

இயற்கை சீற்றங்கள்,வறட்சி இவைகளை சமாளிக்க வேண்டிய அளவுக்கு அரசிடம் தெளிவான கோட்பாடுகளும் கிடையாது அதற்கான வழிகாட்டுதல்களோடு செயல்பட தனி அரசு அமைப்பும் கிடையாது!

:(((

இத்தனைக்கும் வருடந்தோறும் பட்ஜெட்டில் ஆறுகள் குளங்கள் பரமாரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளவேண்டி பணம் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் !

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

தமிழ்,
வணக்கம். சற்றே தாமதமான ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள். (ஒரு ப்ளேட் பிரியாணி பார்சேல்.....)

ரமேஷ் வைத்யா said...

வால்பையர்,
மாடி வீட்டிலிருந்தவர்கள் மூன்று நாள் குடிக்கவும் கழுவவும் தண்ணீர் இல்லாமல் தவித்தார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை. கிகிகி!

ரமேஷ் வைத்யா said...

ஆயில்யன்,
வணக்கம். தங்கள் வருகை என் மகிழ்ச்சி. கடகத்துலே தொடர்ந்து கலக்குறீங்களே...
அதுவும் அந்த 'அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா' ஜூப்பரப்பு!

ரமேஷ் வைத்யா said...

அன்பு சகோ,
பாப்பா அப்போ ஊரில், இதே சாலிகிராமத்தில் என் வீட்டுக்கு ஆறு தெரு தள்ளி ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் என் மாமியார் வீட்டில் இருந்தாள். தனக்குப் பால் கிடைக்கவில்லை என்று எனக்குத் தகவல் தெரிவிக்க இயலாதபடிக்கு என் ஃபோன் செயலிழந்திருந்ததாக நேரில் சொல்லி என்னைத் திட்டினாள். :‍-(

ரமேஷ் வைத்யா said...

வால்,
எனக்கு அடுத்த வீடு பார்ப்பது யார் தெரியுமோ? 'நம்ம' ஹீரோதான். (அவரும் பரிசலும் நம்ம கடைப்பக்கம் வரவே மாட்டேனென்கிறார்கள். வரவைக்கிறேன்)

லக்கிலுக் said...

உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட புழல் ஏரி உடைப்பு காரணமாக இருந்திருக்கலாம். எந்த பத்திரிகையாளருமே அந்த ஏரி உடைப்பை பற்றி விஸ்தாரமாக எழுதாதது வருத்தமான செய்தி.

ஏரி சமூகவிரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது என்று கேள்வி.

ரமேஷ் வைத்யா said...

லக்கி அண்ணா,
செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால்தான் பாதிப்பு என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஏரி திறக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குத்தான் தண்டோரா போட்டிருக்கிறார்கள். டி.வி‍யில் ஸ்க்ரோல் போட்டார்களாம். ஆற்காட்டாருக்கு நன்றி கரன்ட் இல்லை!

கார்க்கிபவா said...

//ஏரி சமூகவிரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது என்று கேள்வி//

என்னாச்சு லக்கியண்ணே.. திமுகவினரையே சமூக விரோதிகள்னு சொல்றிங்க???????


ச்சும்மா.. கோவிச்சுக்காதீங்க‌

பரிசல்காரன் said...

//அவரும் பரிசலும் நம்ம கடைப்பக்கம் வரவே மாட்டேனென்கிறார்கள். வரவைக்கிறேன்//

WE ARE THERE IN YOUR HEART ALWAYA...!

வால்பையன் said...

//WE ARE THERE IN YOUR HEART ALWAYA...!
//

யார் இந்த பீட்டர்?

லக்கிலுக் said...

கார்க்கி சார்!

//என்னாச்சு லக்கியண்ணே.. திமுகவினரையே சமூக விரோதிகள்னு சொல்றிங்க???????//

நீங்கள்லாம் ரொம்ப நல்லவா. பெரியவா. உங்க கிட்டேயெல்லாம் வாதம் பண்ண முடியுமா?

இதுவும் சும்மாங்காட்டி தான் நைனா. கோச்சுக்கப்படாது.

லக்கிலுக் said...

//லக்கி அண்ணா,
செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால்தான் பாதிப்பு என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஏரி திறக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குத்தான் தண்டோரா போட்டிருக்கிறார்கள். டி.வி‍யில் ஸ்க்ரோல் போட்டார்களாம். ஆற்காட்டாருக்கு நன்றி கரன்ட் இல்லை!//

கிழஞ்செழியன் தாத்தா! (சின்னப் பையனை அண்ணான்னா சும்மா உட்ருவோமா?)

அமாவாசைக்கும், பிரியாணிக்கும் ஏது சம்பந்தம்?

வடபழனிக்கும், செம்பரம்பாக்கத்துக்கும் ஏணி வெச்சாலும் எட்டாதே?

வெள்ளமானது உங்க ஏரியா மட்டுமல்ல. அம்பத்தூர், கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ எல்லாமே கடலா மாறிடிச்சி!

KarthigaVasudevan said...
This comment has been removed by the author.
வலையப்பன் said...

உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட புழல் ஏரி உடைப்பு காரணமாக இருந்திருக்கலாம். எந்த பத்திரிகையாளருமே அந்த ஏரி உடைப்பை பற்றி விஸ்தாரமாக எழுதாதது வருத்தமான செய்தி.

ல‌க்கிலுக் நீங்க‌ சொன்ன‌து த‌வ‌றான‌ செய்தி. கிழ‌ஞ்செழிய‌ன் ஜூனியர் விகடனில் எழுதிய அந்த க‌ட்டுரைக்கு ப‌க்க‌த்திலேயே செம்ப‌ர‌ம்பாக்க‌ம் பூண்டி ஏரிக‌ள் இர‌வில் திற‌க்க‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ம் எழுத‌ப்ப‌ட்டிருப்ப‌தை நீங்க‌ள் ப‌டிக்க‌வில்லை போலும். ர‌மேஷ் அண்ணா இதை எல்லாம் சொல்ல‌ மாட்டீங்க‌ளா...

rapp said...

:(:(:(

rapp said...

//ALWAYA//

இது என்ன திட்டற வார்த்த மாதிரி இருக்கு, அர்த்தம் என்ன?
:):):)

ரமேஷ் வைத்யா said...

ராப்,
முதல் வருகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

2006ல் சாலிகிராமத்தில்.

இதே வகையில் சொ(நொ)ந்த அனுபவம் நமக்கு உண்டு.

rapp said...

me the 25TH:):):)

ரமேஷ் வைத்யா said...

அதிரை ஜமால்,
நல்வரவு.

rapp
என் வலைப்பூவில் முதன் முதலாக 25 அடித்து வெள்ளி விழா கொண்டாட வைத்த உங்களுக்கு நன்றி

அன்புடன் அருணா said...

அனுபவித்தது போன்ற உணர்வு படிக்கும் போது....
அன்புடன் அருணா