Thursday, February 19, 2009

நண்பர்கள் நண்பர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1) வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க ‍ – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?

2) கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வ‌ர்றீங்க?

3) பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது. ஆனா சிகரெட் வாங்கிட்டு வர்றது, பத்தவைக்க தீப்பெட்டி ஏற்பாடு பண்றது, சைடு ஆர்டர் பண்றது இதெல்லாம் நாலைஞ்சு தடவை சொல்லி, ரிமைண்டர் வெச்சு அப்புறம்தான் நடக்குது. அது ஏன்?

4) ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?

5) நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?


6) கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?

7) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?

8) அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?

9) நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?


10) பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?

56 comments:

ரமேஷ் வைத்யா said...

enna kodumai? thamizhmanaththula theriyalaiyee?

பரிசல்காரன் said...

மீ த ஃபர்ஸ்ட் போடலாம்னா.. இதென்ன நமக்கு நாமே திட்டமா?

பரிசல்காரன் said...

தமிழ்மணத்துல தெரியுதுண்ணா.. இருங்க படிச்சுட்டு வரேன். மொத கேள்வியப் படிச்சதுக்கே சிரிப்ப அடக்க முடியாம இருக்கேன்!

பரிசல்காரன் said...

அண்ணா.. என்ன சொல்றதுண்ணே தெரியல..

உங்க எண்ணங்கள் எவ்ளோ இளமைங்கறதுக்கு இந்தப் பதிவு சாட்சி!

பரிசல்காரன் said...

எல்லாமே உங்க அனுபவத்தைக் காட்டுது! (அதாவது நீங்க ஒரு அனுபவசாலின்னு அர்த்தம்!)

narsim said...

சிரிக்காமல் இருக்க முடியவில்லைண்ணே.. கலக்கல்..

//கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?//

சிப்ஸ் நொருங்குதே தலைவா..

ரமேஷ் வைத்யா said...

பரிசல்காரர், நரசிம்,
உங்கள் வரவு நல்வரவு. (ஆபீஸில் அவ்வளவு வேலை.)

கார்க்கிபவா said...

நடத்துங்க.. நடத்துங்க.. எந்தக் கேள்வியையும் சாய்ஸில் விடாத உங்க மன தைரியத்தை என்னவென்று சொல்வது?

pudugaithendral said...

பரிசல் எழுதும் பதிவுகள் அழைக்கப்படாமலேயே தொடர் பதிவாகிவிடுகிறது என்பது இப்ப கன்ஃப்ர்ம் ஆயிடுச்சு.

அடுத்து யார் யாருக்கு 10 கேள்விகல் கேட்க போறாங்களோ???

பொறுத்திருந்து பாப்போம்.

எல்லா பதிவையும் ஒண்ணா சேத்து நான் ஒரு பதிவு போட்டுக்கறேன்.

:)))

anujanya said...

இந்த வாரம் வரேன். உங்க குறையை நிவர்த்தி செய்துவிடலாம் :)

கலக்கல்.

அனுஜன்யா

நட்புடன் ஜமால் said...

அட இன்னாபா இது


10 கேள்விகள் மயமா இருக்கு ...

நட்புடன் ஜமால் said...

\\) போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?\\


ஹா ஹா ஹா ஹா ஹா

ரமேஷ் வைத்யா said...

கார்க்கி,
வணக்கம். இதுக்கு பரிசல் ஏற்கெனவே பதில் சொல்லியிருக்கார் (அனுபவ மேட்டர்)

புதுகைத் தென்றல்,
அசைவமாயிடுமோன்னு பயந்தேன்.

ரமேஷ் வைத்யா said...

கவிஞர் அனுஜன்யா அவர்களே,
வருகைக்கு நன்றி. (ரெண்டு வருகைக்கும்!)

நட்புடன் ஜமால்,
கருத்து(!)க்கு நன்றி.

வால்பையன் said...

//வண்டி ஓட்டணும் ஜாக்கிரதை, ரெண்டு பெக் அடிச்சதுக்கப்பறம் கொஞ்சம் கேப் விடுங்க ‍ – இப்படி நாங்க சொல்ற எந்த வேலையையும் உருப்படியா நீங்க செஞ்சதா சரித்திரம் இல்லை. அது ஏன்?//

அப்படியெல்லாம் கிடையாது,
சில சமயம் நீங்க இதெல்லாம் கேக்குறிங்க!

வால்பையன் said...

//கடையில் போய் சரக்கு வாங்கீட்டு வரச் சொன்னா, அதெப்படி நாங்க முக்கியமா சொல்லிவிட்ட பிராண்டை மாத்தி வாங்கிட்டு வ‌ர்றீங்க?//

இருக்குறத தானே வாங்கியாற முடியும்.

வால்பையன் said...

//பக்கத்து டேபிள்காரர்களுக்கு சைடு டிஷ் தர்றது, சரக்கு மாஸ்டருக்கு சமையல் டிப்ஸ் தர்றதுன்னு எல்லாமே உடனே ஞாபகம் வெச்சுட்டு நடக்குது.//

சமூக தொண்டு எங்க ரத்ததில் ஊறியது

வால்பையன் said...

//ஃபுல் மப்புல தோணுற தத்துப்பித்துவங்களை ஏகப்பட்ட பேருக்கு என் செல்லுல இருந்து திரும்பத் திரும்பச் சொல்றீங்களே... அது ஏன்?//

மப்பு தெளிஞ்சா மறந்துருமே!

வால்பையன் said...

//நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?//

தண்ணியடிக்கிறது மப்புக்கு தான்,
ஆனா அட்வைஸ் பண்றது தான் ஜாலிக்கு!

வால்பையன் said...

//கடை அடைக்கப்போற கடைசி அவர்ல சரக்கு தேவைப்படும்போது உங்க மூஞ்சில இருக்கற டென்ஷன், கான்சண்ட்ரேஷன் – ஒம்போது மணிக்கே போலாம்னு நான் சொல்லும்போது ஏன் இருக்க மாட்டீங்குது?//

உங்க டிரீட்டுன்னு சொன்னா 8 மணிக்கு வந்துருவேனே! அத ஏன் சொல்லல!

முரளிகண்ணன் said...

சிரிச்சுக்கிட்டே இருக்கேன். சூப்பர்

மணிகண்டன் said...

கலக்கலா இருக்கு சார்

வால்பையன் said...

//போனைப் போட்டுட்டு எதிர்முனையில கொலைவெறியோட திட்டும்போது செல்லுல மைக்கையும் போட்டுட்டு அதெப்படீங்க ஒரு ரியாக்‌ஷனும் காட்டாம முஞ்சிய வெச்சுக்கறீங்க?//

மப்புல காரம சுறுக்குன்னு சாப்பிட்டா நல்லாயிருக்கும்னு சொல்லிருக்காங்க!
அது மாதிரி தான் இதுவும்.

Cable சங்கர் said...

//பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா? //

haa..haa.. haa.. என்ன அண்ணே.. ஓரே ஜாலியோ..

வால்பையன் said...

//அடுத்தவன் தட்டுல இருந்து நான் ஆம்லேட்டை எடுத்துத் திங்கும்போது தலையில அடிச்சுக்கிற நீங்க, என் தட்டை வழிச்சு வழிச்சு நக்குறீங்களே... அது ஏன்ங்க?//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என் சோக கதைய கேளு தாய் குலமே!

வால்பையன் said...

//நான் சரியா வாட்டர் மிக்ஸ் பண்ணும்போதெல்லாம் கொஞ்சம் சரக்கை எச்சாவா ஊத்திக்கிற நீங்க, நான் டைட்டா இருக்கும்போது ராவா ஊத்தினாக்கூட அது ஏன் உங்களுக்கு அவ்ளோ பிடிக்குது?//

நிறை குடத்துல ஊத்துனா கண்டிப்பா கீழே தான் ஒழுகும்னு தெரியுமே!

வால்பையன் said...

//பாருக்குக் கிளம்பும்போது ‘லேட்டாச்சு.. லேட்டாச்சு’ன்னு குதிக்கறீங்களே.. அதே மாதிரி மப்பு ஏறினதுக்கு அப்பறம் அதே அளவு ஸ்டெடியா உங்களால குதிக்க முடியுமா?//

முக்தி நிலையில பறக்கத்தான் முடியும்.
குதிக்க முடியாது.

Thamiz Priyan said...

:)))

ரமேஷ் வைத்யா said...

வால்பையன்,
அடி பின்ன ஆரம்பிச்சுட்டீங்க போல. தம்பியுடையேன் படைக்கஞ்சேன்.

ரமேஷ் வைத்யா said...

முரளிகண்ணன்,
மணிகண்டன்,
நன்றி. மீண்டும் வருக!

ரமேஷ் வைத்யா said...

கேபிள் சங்கர்
இது எங்க ஸ்பெசாலிட்டில்லா?

தமிழ்பிரியன்,
சௌரியமெல்லாம் எப்பிடிண்ணே? ரெம்ப நாளா ஆளே காங்கல..?

பரிசல்காரன் said...

தன் சம்பந்தப்பட்ட பதிவென்றதும் துள்ளி ஓடி வந்து கில்லிபோல விளையாடறாரே வாலு!

பரிசல்காரன் said...

சொல்ல மறந்துட்டேன். என் பதிவுக்கு தாமிரா & நீங்க ரெண்டுபேருமே எதிர்ப்பதிவு போட்டீங்க.அவருது ஒரு இஞ்ச் பவுன்ஸ்ல ஃபோர் ஆய்டுச்சு. உங்களுது காலரில விழுந்த சிக்ஸ் ஆய்டுச்சு!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அந்த ஏழாவது கேள்வியே எனக்குப் பிடிக்கலை. அதை மாத்துங்க, எல்லாமே நம்ம தண்ணி சம்பந்தப்பட்டதா இருக்கட்டும் :)

ரமேஷ் வைத்யா said...

1000 வருகை அடிக்க உதவிய சரக்குப் பதிவைப் படித்த உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

ரமேஷ் வைத்யா said...

இனமானானப் போராளி ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களே,
வருக வருக. (அதுவும் நம்ம தண்ணி சார்ந்த கேள்விதானே..? இன்னும் கொஞ்சம் தெளிவாப் போடணுமோ? போட்டாத் தெளிவுக்கு எங்க போறது?

எட்வின் said...

இன்னைக்கு என்ன ஒரே கேள்வி மயமாவே இருக்கு...
இன்னும் சிரிப்ப அடக்க முடியல.

//நீங்க தண்ணியடிக்கிறது ஜாலிக்காகன்னு சொல்ல வேண்டியது, அதுவே நாங்க அடிச்சா அட்வைஸ் பண்றது. அதெப்படீங்க?//

ஊருக்கு தான பாஸ் உபதேசம் எல்லாம்.
ஆயிரத்திற்கு வாழ்த்துக்கள்.

Sanjai Gandhi said...

அட அட.. போட்டி போட்டு கலக்கறாய்ங்கய்யா.. :))

Kumky said...

ழேசா த்ழ சுத்ழுது...
ராநுவ ரகழிசியத்த இப்பிழி போழ்ழு ஒழக்கிழாமா த்ழ..ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

அறிவிலி said...

ஹையா... நானும் ஒரு எதிர் பதிவு போட்டேனே....

மங்களூர் சிவா said...

haa haa
:)))))))))

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

அத்திரி said...

கண்ணுல தண்ணி வந்திடிச்சிண்ணே........... முடியல......சிரிக்க.......

அத்திரி said...

// கார்க்கி said...
நடத்துங்க.. நடத்துங்க.. எந்தக் கேள்வியையும் சாய்ஸில் விடாத உங்க மன தைரியத்தை என்னவென்று சொல்வது//


ஹிஹிஹிஹி ரிப்பீட்டேய்.............

அத்திரி said...

//பரிசல்காரன் said...
அண்ணா.. என்ன சொல்றதுண்ணே தெரியல..

உங்க எண்ணங்கள் எவ்ளோ இளமைங்கறதுக்கு இந்தப் பதிவு சாட்சி//

)))))))))))))))))))

அத்திரி said...

46

அத்திரி said...

47

அத்திரி said...

48

அத்திரி said...

49

அத்திரி said...

50haghhahahaaaaaaaaaaaaa

தமிழன்-கறுப்பி... said...

முடியலை அண்ணே...

தமிழன்-கறுப்பி... said...

நிஜமாவே நீங்க தண்ணி அடிப்பிங்களா... :)

ரமேஷ் வைத்யா said...

அடப்பாவிங்களா,
நான் மாஞ்சு மாஞ்சு எழுதினதையெல்லாம் கண்டுக்காம விட்டுட்டு சரக்கு பதிவுக்கு வந்து ஃபிப்டி அடிக்கிறீங்களே...

அத்துணை வாக்காளப் பெருமக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும்...

அத்திரி,
நான் இளமை என்பதில் உங்களுக்கென்ன அவ்வளவு சிளிப்பு?!

மங்களூர் சிவா,
வருக வருக‌

தமிழன் கறுப்பி,
யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டீர்கள்? தண்ணி குடிக்காமல் எந்த ஜீவனாலாவது இருக்க முடியுமா?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)-

நையாண்டி நைனா said...

அண்ணே ... கொஞ்சம் நம்ம வீட்டுக்கும் வந்து தலைய காட்டுங்க...

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

அடுத்த தடவ பாருக்கு பொகும்போது நானும் வர்றேன்.( ஆமா பாரு எப்படியிருக்கும்)