Tuesday, June 2, 2009

என் கைபேசிக்கும் எனக்கும் சண்டை

இல்ல சார்,
பேண்டுக்கிட்டிருக்கேன்
கழுவுனதும் வந்துர்றேன்
என்பதாக முடிந்த
உரையாடலில் பங்கு பெற்ற எனக்கு
தொலைபேசி நாகரிகம் தெரியும்

ஒருமுறை வெளியூர் ஓட்டல் ஒன்றில்
புணர்ந்துகொண்டிருந்தபோது
வந்த
அழைப்பையும் எடுத்துப் பேசினேன்

வெறியேறிய தருணங்களில்
நான்
தூக்கியெறிவது
என் கைபேசியாகவே இருக்கிறது

என் எண் திரையில் ஒளிர்ந்தால்
தவிர்க்கும் பெண்களென‌
மூவர் உண்டு
அவர்களில் யாரும் உறவினர் இல்லை

அகாலத்தில்
மயங்கிக் கிடக்கையில்
அழைத்து
இலக்கண சந்தேகம் கேட்டு
எங்காவது இலக்கில்லாமல் பிக்னிக் போவோமா
என்கிறான்
நண்பனென்கிற பரம வைரி

கடும்கோபத்தில்
நண்பனைப் பழிவாங்க‌
குரலெடுத்துப் பாடுகிறேன் நிசியில்

வீடு காலிசெய்யச் சொல்லிவிட்டார்கள்

சாமான் சட்டிகளைப் போட
ஒரு ரூம் கிடைக்குமா
ப்ளீஸ்...

26 comments:

மயாதி said...

அதுதானே அது தொல்லை பேசி....

good

தண்டோரா said...

என்னை எடுத்து பேசியவன்
இன்று எடுத்தெரிந்து ஏசுகிறான்..
என்ன பிழை என்மீது?
இவன் கேட்ட கேள்விக்கு.
இணக்கமான பதில் தராதது என் குற்றமா?
இல்லை எதிர்முனையின் குற்றமா?
இதற்கா உன்னை அந்த விலை கொடுத்து வாங்கினேன்.
என்று புலம்புகிறாயே..மூடனே..புரிந்து கொள்..
நான் ஒரு ஜடப்பொருள்தான்...

எண்ணிபார்..நீ சொல்வது பொய்
என்று தெரிந்தும் அதை நான்
அப்படியே எதிர்முனைக்கு சொன்னதில்லையா?
எத்தனை முறை நான் கதற,கதற
நீ என்னை ஏளனம் செய்திருக்கிறாய்?
நான் உன் அடிமையல்ல...ஒரு தாசி..
உள்ளிருக்கும் உன் அடையாளத்தை
உருவிக்கொண்டு என்னை வீதியில் வீசி விடு..
கண்டெடுப்போர் என்னை கொண்டாடுவார்..

எம்.ரிஷான் ஷெரீப் said...

:)))))))))))))))))))))))))))

எம்.ரிஷான் ஷெரீப் said...

:)))))

லக்கிலுக் said...

உங்கள் கைப்பேசியில் பதியப்பட்ட தொடர்புகளில் இருப்பவர்கள் அபாக்கியவான்கள். வேறென்ன சொல்ல? :-)

முரளிகண்ணன் said...

மிகவும் ரசித்தேன்.

குசும்பன் said...

//சாமான் சட்டிகளைப் போட
ஒரு ரூம் கிடைக்குமா
ப்ளீஸ்... //

சட்டி போட்டுவிட ஆள் கிடைக்குமா என்று கேட்காமல் விட்டீங்களே:))))))

செல்வேந்திரன் said...

எனது நண்பனும் உங்களது பரம பக்தனுமாகிய மாணிக்கத்திடம் தகவல் சொன்னபோது அவருக்கு எந்த ஏரியா ப்ரியமோ அந்த ஏரியாவில் பன்னிரெண்டு மணி நேரத்திற்குள் அவரையும் அவரது வஸ்துகளையும் இடப்பெயர்ச்சி செய்து தர இயலும் என்கிறான். எந்த ஏரியா வேண்டும்?

கே.ரவிஷங்கர் said...

நல்ல வேளை
நான் தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கிறேன்

☼ வெயிலான் said...

கவிதை என்று பாராட்டுவதா? இல்லை அதிலிருக்கும் உண்மைக்கு வருந்துவதா என தெரியவில்லை.

கார்க்கி said...

:))

:((

இளைய கவி said...

//June 2, 2009 2:01 AM
குசும்பன் said...
//சாமான் சட்டிகளைப் போட
ஒரு ரூம் கிடைக்குமா
ப்ளீஸ்... //

சட்டி போட்டுவிட ஆள் கிடைக்குமா என்று கேட்காமல் விட்டீங்களே:))))))//

அக்மார்க் குசும்பு

Cable Sankar said...

கவிதைக்கு
காரணமான
ரெண்டு கவிதைகளும்
நச்..

ILA said...

/சாமான் சட்டிகளைப் போட
ஒரு ரூம் கிடைக்குமா//
இதுல ஒன்னும் ரெண்டு அர்த்தம் இல்லையே?

எம்.எம்.அப்துல்லா said...

இன்னும் அந்த கைபேசி உங்களிடம் இருந்தால் ஒரு மிஸ்டு கால் குடுங்கள்

குறிப்பு : நள்ளிரவு பனிரெண்டு மணிக்கல்ல

:)))

தமிழ் பிரியன் said...

தொல்லைப் பேச்சாகியதற்கு முன் ரெண்டிலும் டவுசரைக் கழட்டி இருக்கீங்க... அதான் பிரச்சினைக்கு முக்கிய காரணம்ன்னு நினைக்கிறேன்.. ;-)
:((

வால்பையன் said...

எதுக்கு எம்புட்டு இம்சை!
அந்த கைப்பேசியை எனக்கு பார்சல் பண்ணி அனுப்பிருங்க!

(நிறைய பேர் சந்தோசப்படுவது தெரிகிறது)

அதிஷா said...

;-(

ரமேஷ் வைத்யா said...

அனைவருக்கும் நன்றி.
நண்பர்கள் லேபிளையும் கவனிக்கவும்.
அது எளக்கியம், புனைவு! :‍ )

நர்சிம் said...

எளக்கியம் அருமை.ரீடிங் பிட்வீன் த லைன்ஸ் தான் எல்லாமே..

ரமேஷ் வைத்யா said...

மயாதி,
முதல் வருகை! :0 )

தண்டோரா,
திராவிட எழுத்துகளை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

ரிஷான்,
நன்றி. நலமே விழைகிறேன்.

லக்கிலுக்,
; )))

முரளிகண்ணன்,
நன்றி.

குசும்பன்,
கேட்காவிட்டால் வேண்டாம் என்று அர்த்தமா?

செல்வேந்திரன்,
நன்றி

ரவிஷங்கர்,
ஐஎஸ்டி வசதி பொருத்தப்போகிறேன்

வெயிலான்,
வருத்தப்படாதீர்கள்.

கார்க்கி,
ஏன் சிரித்துக்கொண்டே அழுகை?

இளைய கவி,

கேபிள் சங்கர்,

இளா,
நன்றி.

அப்துல்லா,
அதே நம்பர்தான். (ஜாக்கிரதை)

தமிழ்ப்பிரியன்,
புரியலை.

வால்பையன்,
அதிஷா,
நன்றி

Karthikeyan G said...

:-)))

சார், செல்போன் இல்லாமலும் இருக்க முடியவில்லை.

நான் நாலாவது முறையாக செல்போனை தொலைத்த பிறகு வீம்பாக ஒரு மாதம் செல்போன் இல்லாமல் இருந்து பார்த்தேன். முடியவில்லை.

kartin said...

ரூம் தர்றேன்
ஆனா இத சொல்லுங்க...
கைபேசி, செல்பேசி, அலைபேசி... எது நல்லாருக்கு?

http://nesamithran.blogspot.com/ said...

அண்ணா...!!!!!!!!!!!!!
மிக நீண்ட வருடங்களுக்கு பிறகு
உங்கள் கவிதைகளை வாசிக்கவும் உங்களை குறித்த
தகவல்களை அறிந்து கொள்ளவும் முடிந்ததில்
மிக்க மகிழ்ச்சி...!
இன்னும் நான் கிறுக்கி கொண்டிருப்பதற்கு நீங்கள் தான்
முக்கியமான காரணம் ..!

- நேசமித்ரன்

ரமேஷ் வைத்யா said...

வாங்க கார்த்திகேயன்ஜி

நன்றி கார்ட்டின்.
எதுவுமே நல்லா இல்லை என்பதுதானே விஷயம் : )
ஓ.கே... என் சாய்ஸ் செல்லிடப்பேசி!

நேசமித்ரன்ல்
சென்னைதானா, ஊரா? என் ஜிமெயில் ஐடி ப்ளாக்கிலேயே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

பா.ராஜாராம் said...

அருமை எம்.ஆர்.ராதா. :-)

நினைவிருக்காஜி?