Tuesday, June 9, 2009

ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா

"ஹுக்கும், கதையெழுதுறீங்க. கட்டுரை எழுதுறே. பாராட்டி புனைபெயர்ல லெட்டரும் எழுததிக்கிறீங்க, என்ன பிரயோஜனம்... என்னைப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கியாடா, என் வெண்ட்ரூ? "

போத்தலின்,இந்த வரிகளை நான் நாகரிகமாக எழுதியிருந்தாலும், சிச்சுவேசன் என்னமோ எஸ் எம் எஸ் படத்தில் சந்தானம் பேசும் டெரர் டயலாக்குக்கு ஈக்குவலானது.. கிளாஸுக்கும் தண்ணீர் பாக்கெட்டுக்குமான இடைவெளி அதிகம் இருந்தது. இரண்டே வார்த்தைகளில் சொல்வதென்றால்,‘டவுசர் கிளிந்தது’. அடுத்து தாவு தீர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில்.. “என்ன செல்லம் இப்பிடி சொல்லிட்ட?.உன்னைப் பத்தி எவ்வளவு எழுதி வச்சுருக்கேன் தெரியுமா?” என்று சொல்லிவிட்டு.விட்டு,ட்டு,டு..என்று விக்கி வெலவெலத்தாலும், டங்கு டரியலாகாமல் இருக்க, இந்த இரவை சரக்குக்கான கடிதமாய்...

******

ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்ம‌‌ம்மா,

பிளஸ் டூ கடைசிப் பரிட்சை முடித்து தலையில் துண்டு போடாத குறையாக ஒளிந்து ஒளிந்து பாருக்குள் வந்து நீ குழந்தை போல நின்றிருந்த இடங்களிலேயே நானும் நின்று, மூலை முடுக்கில் இருந்து எவனாவது பார்த்துத் தொலைக்கிறானா என்று பயந்து பயந்து , ஹும்ம்ம்...

சாக்கணாக் கடையின் ஏதோவொரு 'சரக்கு' மாஸ்டரிடம், “ஒரிஜினல்தானே இது” என்று சந்தில் சிந்து பாடி, “என்னடா கேட்டே... அக் மார்க் பட்டை மாதிரி இருக்கும்டா” என்று அவர்கொஞ்சம் பீர் வார்த்தார்.


அதன் பிறகு உன்னைப் பார்க்க கடைக்கு நான் வந்த அந்த சனிக்கிழமை என்னில் இன்னும்.

சளி பிடித்தது என்று சொன்ன‌தற்கு அர்த்தம், ரம்மில் சுடு தண்ணியும் மிளகுத் தூளும் கலந்து அடி என்கிற மருத்துவ உண்மையை வழக்கமாக்கிக்கொண்டது அன்றிலிருந்துதான்.

45 மில்லிதான் நான் முதலில் போட்டது. அதன்பிறகு கடைசிவரை என்கூட வரப் போகிறாய் என்பதையறியாமல்... உன் மீதான காதல் வாய்த்த தருணம் காந்தி ஜெயந்தியன்று கடையடைத்திருந்த தினம்தான். பிளாக்கில் விற்கிறார்களா என்று தயங்கித் தயங்கி நான் நான் தேடினேன்...‘சிங்காரி சரக்கு நல்ல சரக்கு’ என்று பாட‌ல் எங்கோ ஒலித்தது நினைவில் இன்னும் இன்னும் இன்னும் இருக்கிறது துவர்க்கிறது.

அப்புறம் அன்றிரவு கைகால் நடுங்க, தூக்கத்தை இழந்த‌ அதேவேளைதான் நான் உன்னில் என்னை இழந்து விட்டேன் என்றுணர்ந்த தருணமும்.

மறுநாள் மாலை வீட்டை விட்டுக் கிளம்பும்போதே புன்சிரிப்பு என்னை ஆட்கொண்டது. அது கொஞ்சம் கோணலாக இருந்ததையும் உணர்ந்தேன். எம்.ஜி.ஆருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மதுவிலக்கைத் தளர்த்தி எத்தனை தலைமுறைகளைச் சந்தோஷப்படுத்தினார்..!

ஒருவேளை லோடு இறக்கிக்கொண்டு இருந்தார்கள் எனில் , ஒரு நொடி அங்கே காத்திருந்தாலும் உயிர்வலி எனக்கு ஏற்ப்படுமே,ஏனெனில் அந்த இடமும் அங்கு நிற்பர்வர்களைப் பற்றிய எண்ணமும் அதைப் பற்றி சமூகம் கொண்ட பார்வையும் இப்படி என்ன என்னமோ தோன்ற... ஒரே அழுத்து..அவ்வளவு வேகம் போனதில்லை நான் அடுத்த கடையைத் தேடி. அங்கே போய்ச் சேர்ந்தவுடன் உனக்காகக் காத்திருக்கும்பொழுதே இன்னுமொரு சந்தேகம். அங்கேயும் லோடு இறக்க வந்துவிடுவார்களோ என்று. எதற்கு வம்பு என இரண்டு கடைகளுக்கும் நடுவில் நின்றிந்த அந்த நிமிடங்களில் எத்தனை %^$#&*%$# என்பதை எழுத இன்னும் தமிழில் வார்த்தைகள் கண்டுபிடிக்கவில்லையடி ரம்ம‌ம்மா..

அடுத்த நொடி உன் முன் நான்.கண்முன் நீ. நிறமற்ற போத்தலில் நீ செம்பழுப்பாய் இருந்தாலும் அப்போதைய என் தேவை ஒரு கட்டிங் கரெக்ட் பண்ணுவதே.ஏனெனில் நம்மைப் பொறுத்தவரை 16 மணிநேரத்திற்கும் மேலான இடைவெளி என்பது ஒரு யுகக் கணக்காகிப் போனதால்...

ரோட்டோர ஆயாக்கடையைப் பார்த்ததும் ஆம்லேட் சாப்பிட‌லாமா என்று தோன்றியது. ஆம்லேட் சொல்லும்முன் அந்தக் கடை வாசலில்...ஒருவன் ஆம்லேட் தின்றுகொண்டிருந்தானே... அவன் தோற்றம்... அதுவும் அந்த விரல்கள்... அதுவும் ஒரு புண்நாள்.

உன்மீதான என்காதல் எவ்வளவு காட்டமாய்ப் பயணிக்கிறது என்பது எனக்கு மட்டுமே தெரியும். சந்தேகமிருந்தால் என் உடலை அரிந்து எவனையாவது ரத்தம் குடித்துப் பார்க்கச்சொல், இரண்டு குவார்ட்டர் அடித்ததுபோல் இருக்குமென் ரத்தம்.


உன் மீதான என் காதல் இனி கூடுவதற்கு வாய்ப்பேதுமில்லை.ஏனெனில் ஃபுல்லை விட கூடுதலாக அடித்தால் கட்டுப்படியாகாது. மேல்வரும்படி கிடைத்தால் கூட்டியிருப்பேனே...

ஆக..

என் உணர்வின் உச்சம் நீ.. வாழ்க என் மீதான உன் காதல். அது மட்டுமே என்னை விடுவிக்கும் இனி.


மொத்தமாய் சித்தம் முழுக்க உன் நினைவுகள்
ரத்தம் முழுக்க உன் மூலக்கூறுகள்,இதயம் முழுக்க நீ.. என்றாலும்
நான் தானே நீ...

இப்படிக்கு,

போதையாய்,
ம‌ப்பில்
'கப்பு'டன்
உளறலுக்கு
குவார்ட்டர் கோயிந்த‌ன்

19 comments:

ரமேஷ் வைத்யா said...

இது நர்சிம்மின் பதிவைப் படித்துவிட்டு எழுதியது. தமிழ்மணத்தில் அது இல்லாமல் இது இருக்கிறதே எப்படி? யாராவது காப்பாத்துங்களேன். ப்ளீஸ்..!

சென்ஷி said...

:))

மீள்வினை பொருத்தமாக இருக்கிறது!

கார்க்கி said...

ஹாஹா..

தல செம ஃபார்ம போல.. என்னா வேகம்..

ரமேஷ் வைத்யா said...

#சென்ஷி,
வாம்மா மின்னலு... நன்றி

கார்க்கி,
என்னா வேகத்தில் படித்துவிட்டீர்கள்! நல்ல வேளை சிரிச்சீங்க.

வண்ணத்துபூச்சியார் said...

யப்பா, போட்டு தாக்கி விட்டீர்களே...

செம செம செம .....

லக்கிலுக் said...

பதிவின் தலைப்பு ‘ராங்கி ரங்கம்மா’ பாட்டுக்கு பக்காவாக செட் ஆகிறது.

‘அப்படிப்போடு’ பாடலின் ட்யூன் சமீபத்தில் கிருஷ்ணா தெலுங்குப் படத்துக்கு பயன்படுத்தப்பட்டது. கிருஷ்ணா தமிழில் மதுர திமிரு என்ற பெயரில் டப் செய்யப்பட்டபோது அதே ட்யூனுக்கு தமிழில் ‘பொட்ட கோழி கோழி’ என்று பாட்டெழுதியிருக்கிறார்கள்.

ஏதோ பின்னூட்டம் போடவேண்டுமே என்பதற்காக இதையெல்லாம் போடவேண்டியிருக்கிறது :-(

டக்ளஸ்....... said...

நர்சிம்ம‌ டரியலாக்கீட்டீங்க..!

ரமேஷ் வைத்யா said...

வண்ணத்துப்பூச்சியார்,
வருக. கெமிஸ்ட்ரிதானே...

லக்கிலுக்,
நீங்க பின்னூட்டம் போட்டதுல சந்தோஷம். போடலைன்னா வருத்தமில்லை. பை தி வே தகவல் கச்சிதம். நன்றி.

டக்ளஸ்,
மிக்க நன்றி.

கே.ரவிஷங்கர் said...

அதிஷா வலையில் இருக்கிறேனா என்ற
ச்ந்தேகம் இருந்தது.நல்ல வேளை.


”கிக்கு கொடுக்கது ரம்மு.கத்துக் கொடுத்தவரு அம்மு”ன்னு ஒரு பாட்டு
ஜெய்சங்கர் படத்தில் உண்டு.

NESAMITHRAN said...

இதனோடு சற்றே தொடர்புடைய
சிலவரிகளை பின்னூட்டமாக
உங்கள் அனுமதியுடன் பதிவிடுகிறேன்
தீட்டுத்துணியிலிருக்கும்
உதிரக்கறையாய் திரவ மீதங்கள் காய்ந்த
கசங்கிய கோப்பைகள்

கழற்றுவதற்கு முன்பிருக்கும் ஆணுறையென
அணைக்க மறந்த சிகரெட்டுகள்

நொதித்துப் போன கனவுகளாய்
நமத்து போன மிக்ஸர் காகிதங்கள்

சீட்டுக் கட்டுக்கு வெளியே
கலைந்து கிடக்கும்
லுங்கிகளுடை ராஜாபார்ட்டுகள்

வாடகை பாக்கி கேட்கவந்து
மௌனமாய் தரையிறங்கிப் போகும்
பேரிளம்பெண்

தண்டோரா said...

என்னத்தை சொல்றது?

வால்பையன் said...

நீங்கல்லாம் எதிர்பதிவு போட்டா நாங்க எங்க போறது!

லதானந்த் said...

டாய்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

என்னதிது..?

தமிழ்மணத்துல ஒரே சரக்கு வாடையா அடிக்குது..?!!!!

Cable Sankar said...

உண்மைதமிழன் அண்ணே.. அப்படி வாடை அடிச்சிதுன்னா.. பதிவுலத்துக்கு லீவு போட்டுட வேண்டியதுதானே..?

ரமேஷ் வைத்யா said...

கே. ரவிஷங்கர்,
நன்றி.

நேசமித்திரன்
கவிதை முன்னைக்கிப்போது முன்னேற்றம்.

தண்டோரா
எதையாவது சொல்லுங்கண்ணே.

வால்பையன்
உங்களுக்கு சரக்குக்கா பஞ்சம்?

லதானந்த்
ஹாய்!

உண்மைத் தமிழன்
முதல் வருகைக்கு வெல்கம்.

கேபிள் சங்கர்,
நீங்க லீவு விட்டுக்கிட்டீங்களா?

தண்டோரா said...

பாட்டாலே புத்தி சொன்னார்.
பாட்டிலாலே குத்தி கொன்றார்..
வீட்டுக்கு வீடு வாசபடி என்றார்...
ஜோராத்தான் எழுதியிருக்கே....
பேஜாராத்தான் இருக்கிறதே...

முரளிகண்ணன் said...

கலக்கல்னா

Poornima Saravana kumar said...

:))