Monday, June 15, 2009

நேற்றைய விபத்து

கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் கோகுலம் சிட்ஃபண்ட்ஸ் சிக்னலில் வலப்புறம் திரும்ப வேண்டும். சிக்னலில் சிவப்பு. டூ வீலரை நிறுத்தினேன். எனக்கு முன்னால் ஒரு கார் மட்டும் நின்றிருந்தது. பின்னால் இருந்த காரின் டிரைவர் ஹார்ன் அடித்தபடி இருந்தார். என் வண்டியை சற்று முன்னகர்த்தினேன். விடாமல் ஹார்ன் அடித்துக்கொண்டே இருந்தார் மேற்படி டிரைவர். இருந்த சில அங்குல இடத்துக்கு நகர்ந்தேன். ஆனாலும், சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும்போதே காரை நகர்த்தி வந்து என் பைக்கை இடித்தான் அந்த டிரைவன். இடக்காலை பலத்த யத்தனத்தோடு உறுதியாக ஊன்ற முயன்று ... முடியாமல் விழுந்துவிட்டேன். இப்போது சிக்னலில் பச்சை. விழுந்த வண்டியைத் தூக்க என்னால் முடியவில்லை. எவ்வளவோ முக்கிப்பார்த்தும்... ம்ஹூம்! அப்போது, நெடுஞ்சாலையே ஸ்தம்பித்து நின்றது. அடர்த்தியான டிராபிக்கில். என் வண்டியைக் கடந்து போகமுடியாமல் என்னை இடித்த காரும், மற்ற வாகனங்களும் நின்று ஹாரன்களைக் கதறடித்துக்கொண்டிருந்தன. பக்கத்திலேயே நின்றிருந்த டூவீலர் பில்லியனில் உட்கார்ந்திருந்த திடகாத்திரனைப் பார்த்து, ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க' என்று கத்தினேன். அவர் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.
ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்கள் பிறருக்கு உதவும் பரோபகார குணத்தோடு இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை, வண்டியைத் தூக்க எனக்கு உதவி நான் ஓரமாகப் போய்விட்டால் நீங்கள் போக வழி கிடைக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

43 comments:

Anonymous said...

என்ன கேவலமான மனிதர்க்ள் ஐயா?
இந்த ஊரில் மட்டும்தான் போக்குவரத்தில் மனிதர்களும் மாடுகலும் ஒரே போல சொரணையில்லாமல் உயிர் பற்றிய கவலையுமில்லாமல் ஒரே மாதிரி திரிகிறார்கள். இப்ப எப்படி இருக்கீங்க?

லக்கிலுக் said...

:-(

வாலும், காலும் பத்திரமாதானே இப்போ இருக்கு?

முரளிகண்ணன் said...

:-(((

மிக வருத்தமான செய்தியண்ணா.

எப்படி இருக்கீங்க.

நர்சிம் said...

???? மனிதம் என்னவானது?

butterfly Surya said...

செத்து போன மனிதர்கள்.

Athisha said...

ச்சே..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Cable சங்கர் said...

:( அடி ஏதாவது பட்டு விட்டதா..?

- யெஸ்.பாலபாரதி said...

:(

இப்போ எப்படி இருக்கீங்க தல!

ரமேஷ் வைத்யா said...

ஆசிப் மீரான்,
அடேங்கப்பா, யாரெல்லாம் வர்றாங்க..! அடி இல்லை. நின்று நிதானித்து சரிந்துதான் விழுந்தேன்.

லக்கிலுக்,
அடடெடெங்கப்பா... அப்புறம் அடிபடவில்லை.

முரளிகண்ணன்,
வருத்தம் தேவையில்லை. அடியில்லை.

நர்சிம்,
: (

வண்ணத்துப்பூச்சியார்,
வாங்க. சுகந்தானே.

அதிஷா,
என்னத்தைச் சொல்ல?

அனானிமஸ்,
ஏதாவது அருத்தம் இருக்கா? வார்த்தைகளைப் பொருள் புரிந்து பிரயோகிக்கவும். அல்லது அடையாளத்தோடு வரவும்.

கேபிள் ஷங்கர்,
நலமே உள்ளேன்.

சரவணகுமரன் said...

:-((

ரமேஷ் வைத்யா said...

பாலபாரதி,
இவ்வளவு ஆதரவு இருக்குமானால், வாரமொரு முறை விபத்துக்குள்ளாகலாம் போலிருக்கிறது.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
உட்டாலக்கடித்தமிழன் said...

\\
பாலபாரதி,
இவ்வளவு ஆதரவு இருக்குமானால், வாரமொரு முறை விபத்துக்குள்ளாகலாம் போலிருக்கிறது. \\

உங்கள் வாயில் ஒரு கிலோ வசம்பை வைத்து தேய்க்க கடவது

உருட்டுகட்டை தமிழன் said...

பாலபாரதி கரீட்டா இதுமாத்ரி பதிவுலே ஆஜராவி தன்னோட இருப்பை இஸ்ட்ராங்க ரெஜிஸ்டரு பண்ணிக்கிடுறாருப்பா

கே.என்.சிவராமன் said...

இப்ப பரவாயில்லையா ரமேஷ்? உடம்ப பார்த்துக்குங்க. நேர்ல வரேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

M.Rishan Shareef said...

:(

http://rishansharif.blogspot.com/2009/06/2.html

இது உங்களை வீழ்த்தியவருக்கும், சுற்றிப் பார்த்திருந்தவர்களுக்கும் !

கார்க்கிபவா said...

நநீங்க ஏன் முதல்ல நகர்ந்தீங்க? ஹார்ன் அடிச்சா அடிச்சிட்டு போறன்..


//உடம்ப பார்த்துக்குங்//

இருந்தாத்தானே பார்க்கிறது.. அப்படி இருக்கிறார் மனுஷன்...

:(((

ஆ! இதழ்கள் said...

take care...

நேசமித்ரன் said...

// நின்று நிதானித்து சரிந்துதான் விழுந்தேன்.//

சந்தோசம் -அடிபடாததுக்கு...
வருத்தம் -மனுஷத்தனம் தான் இல்லேன்னா மூளையாவது வேணாமா ?
முன்னால இருக்கிற வண்டி நிமிந்தாதான் நாம போக முடியும்ங்கற சுயநலமான சிந்தனைகூட இல்லாம ச்சே !

butterfly Surya said...

வண்ணத்துப்பூச்சியார்,
வாங்க. சுகந்தானே.///


என்ன தல.. நான் கேட்க வேண்டியதை நீங்க கேட்கறீங்க..

Please Take Care..

☼ வெயிலான் said...

வண்டி ஓட்டும் போது கொஞ்சம் கவனமா இருங்கண்ணா!

ரமேஷ் வைத்யா said...

அனானிமஸ்,
மனிதர்களை நினைத்து வருத்தப்பட்டுப் பதிவு போட்டால், இங்கே நீங்கள் வந்து நிற்கிறீர்கள். நீங்களும் எழுதுங்கள். நான் பரிந்துரைக்கிறேன். திறமையைப் பார்த்து அசூயைப் படாதீர்கள்.

ரமேஷ் வைத்யா said...

சரவணகுமாரன்,
அடி ஒன்றும் இல்லை.

உட்டாலக்கடி தமிழன், உருட்டுக்கட்டை தமிழன், பைத்தியக்காரன் வருகைக்கு நன்றி.

ரிஷான் ஷெரிப்,
வருக.

கார்க்கி,

ஆ!இதழ்கள்,

நேசமித்ரன்,
நன்றி

வெயிலான்,
//வண்டி ஓட்டும் போது கொஞ்சம் கவனமா இருங்கண்ணா!//
நிக்கும்போது இடிக்கிறான் தலைவரே..!

மணிஜி said...

அன்று நான்....இன்று நீ..அவனை போடா வெண்ட்ரு....என்று சொன்னீர்களா?

ஜோசப் பால்ராஜ் said...

நாளை வேடிக்கைப் பார்த்தவன் வண்டியும் இடிபடலாம், பலத்த அடிபடலாம், அங்கு இப்படி சுற்றியிருப்பவர்கள் முகத்தை திருப்பினால் என்ன செய்வோம் என எண்ணிணால் வேடிக்கைப் பார்ப்பானா அவன்?
அது சரி, சிக்னல்ல நிக்குறப்ப ஹார்ன் அடிச்சா, நீங்க ஏன் வண்டிய நகர்த்துறீங்க? ஹார்ன் தானே அடிச்சுக்க நாயேன்னு விட வேண்டியது தானே.

எம்.எம்.அப்துல்லா said...

ரமேஷ் வைத்யா said...
பாலபாரதி,
இவ்வளவு ஆதரவு இருக்குமானால், வாரமொரு முறை விபத்துக்குள்ளாகலாம் போலிருக்கிறது.

//

உன் வாயில நெருப்ப வைக்க. போய் வாயக் கழுவுண்ணே. எப்பவும் குடிக்கிற பிராந்தில கழுவுனாக்கூட சரிதான்.

குசும்பன் said...

//இவ்வளவு ஆதரவு இருக்குமானால், வாரமொரு முறை விபத்துக்குள்ளாகலாம் போலிருக்கிறது.//

அண்ணே மேல தீக்குச்சி விழுந்தாலே உடைஞ்சு போய்விடும் அளவுக்கு திடமா இருக்கும் உடம்பு தாங்குமா!
முதலில் தினம் ஆரோக்கியமான ”நல்ல” உணவுகளை சாப்பிடுங்க... அட்லீஸ் பைக்கை தூக்கவாது!

வால்பையன் said...

கூடவே இருக்க ஒரு அடியாள் ரெடி பண்ணட்டுமா!

Vishnu - விஷ்ணு said...

//பக்கத்திலேயே நின்றிருந்த டூவீலர் பில்லியனில் உட்கார்ந்திருந்த திடகாத்திரனைப் பார்த்து, ப்ளீஸ், ஹெல்ப் பண்ணுங்க' என்று கத்தினேன். அவர் வேறுபக்கம் திரும்பிக்கொண்டார்.//

மனிதம் கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்கு சார்.
அந்த கார் காரனை சும்மாவா விட்டீங்க.

லதானந்த் said...

உங்களோடு சிலமுறை பைக்கில் வந்த அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். ஒரு தடவை ஓட்டிப் பழக்கமேயில்லாத உங்கள் பைக்கில் உங்களை ஒரு வெஜிடபிள் போல சுமந்து உங்கள் வீட்டில் ஒப்படைத்திருக்கிறேன். சென்னை ட்ராபிக் எனக்குப் புதிசு. பைக் ஓட்டி 20வருஷத்துக்கும் மேலாகியிருந்தது.அந்த பைக்கோ நான் இதுவரை ஓட்டியே இராதது. பைக்கின் கண்டிஷன் மிகமிக மோசம். இதையெல்லாம் வைத்துச் சொல்கிறேன். நீங்கள் பைக்குக்கு ஒரு ட்ரைவர் வைத்துக் கொள்ளுவது நல்லது.

anujanya said...

ரமேஷ்,

என்ன இது? படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கு. நண்பர்கள் சொல்வதைப் பார்த்தால் உங்க உடம்பைப் பற்றி துளியும் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. Thats juz not done. Please take care.

மனிதர்கள் -
'பட்டணத்துத் தெருக்களிலே,
ஆளு நிக்க ஒரு இடமில்லையே
நாடு கேட்டுப் போனதற்கு
மெட்ராசு நாகரிகம் அடையாளம்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்'

பாடல் தான் ஞாபகம் வருது :(

அனுஜன்யா

Anonymous said...

அவர்கள் இத்து போன மனித எந்திரங்கள்

selventhiran said...

க.சீ. சிவக்குமாரும் இன்னொரு அன்பரும் (பாஸ்கரா முருகேஷ் பாபுவா என்று நினைவில் இல்லை) டூ-விலரில் குறுகிய சாலையொன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்களாம். பின்னால் வந்த காரோட்டி ஒருவன் விடாமல் 'ஹார்ன்' அடித்துக்கொண்டே இருந்தானாம். க.சீ. சிவக்குமார் வண்டியை நிறுத்தி அவனைத் திரும்பிப் பார்த்துச் சொன்னாராம்

"ஹார்ன் அடிச்சிக்கிட்டே இருந்தா ரோடு அகலமாகும்னு யார் சொன்னது...?"

அது கிடக்கட்டும்...

உங்கள் நிகர எடையைக் காட்டிலும் பத்து பங்கு அதிகமிருக்கும் வண்டியை யாருக்காவது கொடுத்துவிட்டு ஸ்கூட்டி, ஹோண்டா பிளசர் போன்ற மென்வாகனங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று போன ஜென்மத்திலிருந்தே சொல்லி வருகிறேன் கேட்டபாடில்லை.

வெண்பூ said...

உடம்பைப் பாத்துகோங்கன்னு நாங்க சொன்னா நீங்க கேக்கப்போறதில்லை, அதனால நானும் சொல்லப்போறதில்லை.. வேற என்ன சொல்றதும்னும் தெரியலை :(

Kumky said...

வெண்பூ said...

உடம்பைப் பாத்துகோங்கன்னு நாங்க சொன்னா நீங்க கேக்கப்போறதில்லை, அதனால நானும் சொல்லப்போறதில்லை.. வேற என்ன சொல்றதும்னும் தெரியலை..:-((

அதேதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாம் இலங்கை தமிழர் பற்றி பேசுகிறோம்..:-((

வசந்த் ஆதிமூலம் said...

சொல்வதற்கு ஏதும் இல்லை. பதிவர் சந்திப்பு ஏதும் இல்லையா..? பலபேர்களின் அறிமுகம் பின்னுட்டமளவிலேயே உள்ளது. ஆவலுடன் இருக்கிறேன். மாநிலம் தழுவிய சந்திப்பாக இருந்தால் மிக அருமை.

ரமேஷ் வைத்யா said...

அக்கறையோடு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. இப்போது கவலைப்பட ஏதுமில்லை. பத்து வருடங்களாகக் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறேன். இன்னும் இருக்கிறேன்! நான் விபத்துக்குள்ளானதற்குக் கணக்கே கிடையாது. இந்தப் பதிவு மனிதர்களின் மனோபாவம் பற்றிய என் வியப்புத்தான். நன்றிகள்.

Karthikeyan G said...

:-(((

Beski said...

அட போங்க சார், இந்த மாதிரி ஆரம்பத்துல பாக்கும்போது ‘என்னடா மனுசங்க இவங்கன்னு’ தோனுச்சு. போகப் போக பழகிப் போச்சு. இப்போ மேட்டர் என்னன்னா எனக்கும் இந்த மாதிரி வேடிக்க பாக்கவே தோனுது.
---
அந்த இடத்துல ஒரு சுடிதார் விழுந்துருக்கனுமே... அந்த கார் பஞ்சர் ஆய்ருக்கும்.
---

Beski said...

உடம்பப் பாத்துக்கோங்கண்ணே... வண்டியக் கூட தூக்க முடியாம இருக்கீங்கள்ல, அதச் சொன்னேன். ஒன்னு வண்டிய மாத்துங்க, இல்லனா உங்கள மாத்துங்க.
---
இப்போ நலம்தானே?

வித்யாஷ‌ங்கர் said...

very intresting contiue ireally like it. iam not mean this iyar kadavan