Friday, June 26, 2009

‌நாடோடிகள் விமர்சனம்

உதயம் தியேட்டருக்கு ரொம்ப நாளைக்கப்புறம் இன்று போனேன். நாடோடிகள் படம். இடைவேளையில் பாப்கார்ன் கொறிக்க வந்தால் அங்கே சசிகுமார் நிற்கிறார். ''சசி, பிச்சுப்புட்டியேப்பா... தமிழ் சினிமான்னாலே காறித்துப்பணும்ங்கிறது மாதிரியான நிலைமையை உன்னை மாதிரி ஆளுகதான் மாத்திட்டிருக்கிய" என்றேன். பணிவோடு புன்னகைத்தார். அப்புறம் அவரை ரசிகர் குழாம் சூழ்ந்துகொண்டது.

அநேகமாக படத்தில் நடித்திருந்த அத்தனை பேரும் முதல் காட்சிக்கு அங்கே ஆஜர் ஆகியிருந்தார்கள். "இந்தத் தியேட்டர்தான் மக்களோட பல்ஸ் பாக்குற எடம்" என்றார் நண்பர்.

சசிகுமாரை மட்டுமில்லாமல் அங்கே வந்திருந்த நடிக நடிகையர் அனைவருக்குமே ரசிகர்கள் ஆரவாரத்தோடு முகமன் கூறினார்கள். நா.முத்துக்குமாரிடம், "பிரமாதம் போ" என்று சொல்லிவிட்டு தம்மைப் பற்றவைத்தேன்.


"அது சரீ, விமர்சனம்?" என்கிறீர்களா?


படத்தைப் போய்ப் பாருங்க சாமிகளா...

20 comments:

யாத்ரீகன் said...

நம்பி போலாமா பாஸு.. 3 மணிநேரத்துக்கு மொக்கையா இருந்தா தப்பிக்கலாம்னு பார்த்த விடமாட்டீங்களே :-)

வால்பையன் said...

//"பிரமாதம் போ"//

இதுதான் விமர்சனம்
இதுக்கு மேல் என்ன கரிசனம்!?

Athisha said...

அட!

Cable சங்கர் said...

அப்ப படம் நல்லாருக்காண்ணே..?

butterfly Surya said...

சற்று நீளமாக இருந்தாலும் நல்லாயிருக்குன்னு இப்ப தான் தகவல் வந்தது.

நீங்களும் அதை உறுதி செய்தி விட்டீர்கள்.

M.Rishan Shareef said...

அதுக்குள்ள விமர்சனமான்னு ஓடி வந்தேன்..நல்லவேளை நீங்க எழுதலை..நன்றிங்க..நல்ல, தரமான படங்களை எல்லோரும் முதல்ல பார்க்கட்டும்..அப்றமா விமர்சனம் பண்ணலாம்.

ஆயில்யன் said...

பாஸ் படம் எப்புடீ??


அதை விட ஆயில்யா @ அனான்யா எப்புடி இருக்காங்க :)))))))

கார்க்கிபவா said...

பார்த்தாச்சா?

மணிஜி said...

என்னைய விட்டுட்டு போயிட்டியே மக்கா...ஒரு போன் போட்டிருக்க கூடாதா??����

Jackiesekar said...

நல்ல வேளை எங்க உத மாதிரி முழுக்கதையும் சொல்லிடுவிங்களோன்னு பயந்துட்டேன்

உண்மைத்தமிழன் said...

///jackiesekar said...
நல்ல வேளை எங்க உத மாதிரி முழுக் கதையும் சொல்லிடுவிங்களோன்னு பயந்துட்டேன்.///

சொல்லத்தான போறேன்.. விடுவனா நான்..?

Tweety said...

//Cable Sankar said...
அப்ப படம் நல்லாருக்காண்ணே..? //

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்க கேபிள். படம் நல்லா இல்லைனு சொன்னா நீங்க போக மாட்டீங்களா? :-)

விரைவில், உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

நேசமித்ரன் said...

படத்தை பாருங்கன்னு சொல்றதே அதோட வெற்றிதானே...

நர்சிம் said...

அருமை என்று சொல்லாமல் சொன்ன விமர்சனம் அருமை

ரமேஷ் வைத்யா said...

யாத்ரீகன்,
நல்வரவு. நம்பிப் போறதை விடுங்க. படம் உங்களுக்குப் பிடிக்கலைன்னா, டிக்கெட், இன்டர்வெல் பாப்கார்ன், கோக் செலவை உங்கள் அக்கவுன்டில் போட்டுவிடுகிறேன்.

வால்பையன்,
ஹாய்.

அதிஷா,

// அட!//
படம் பார்த்த போது எனக்கும் இதுதான் தோன்றியது.

ரமேஷ் வைத்யா said...

Cable Sankar ..

// அப்ப படம் நல்லாருக்காண்ணே..?//
யாரு, யார்கிட்ட?

வண்ணத்துபூச்சியார்
ஹாய்...

எம்.ரிஷான் ஷெரீப்
நன்றிடா என் சிங்கக்குட்டி.

ரமேஷ் வைத்யா said...

ஆயில்யன்,
படம் ஜூப்பரு. எனக்குப் பேர் தெரியலை, ஆனா, சசிகுமாரின் தங்கை, தொழிலதிபரின் மகள் இருவரும் கண்ணை விட்டு நீங்க மாட்டேனென்கிறார்கள். தொழிலதிபரின் மகளைக் கல்யாணம் செய்துகொண்டு சும்மா பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதெல்லாம் கூடாது என்கிறாள் மனைவி. அதுசரி, ஆயில்யாவுக்கும் 'நமக்கும்' என்ன ஒரு பேர்ப் பொருத்தம்!

கார்க்கி,
தம்பி, சென்னையில் உதயம் தியேட்டரில் போய்ப் பார். படத்தில் நடித்த பத்துப் பேராவது வருவார்கள். நேற்று நான்கு காட்சிகளையும் பார்த்திருக்கிறார்கள்!

தண்டோரா ,
ஹிஹிஹி... அச்சு அசலா உங்களை மாதிரியே ஒருத்தரு எனக்கு டிக்கெட் எடுத்துக் குடுத்து என் பக்கத்துல உட்கார்ந்து படம் பாத்துக் கருத்துச் சொன்னாரு...

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
ரமேஷ் வைத்யா said...

ஜாக்கிசேகர்,
உண்மைத் தமிழனை இடைவேளையில் பார்த்தேன்.

உண்மைத் தமிழன்,
விடாதீங்க. கதையைப் போடுங்க.

Tweety
ஹாய்!

நேசமித்ரன்,
படம் எஞ்சாயபிளாக இருந்தது.

நர்சிம்,
நன்றி.

Beski said...

அடுத்த தடவ சொலிட்டுப் போங்க, நம்ம வீடு பக்கம்தான், ஆஜர் ஆய்டுறேன்.